பொது செய்தி

தமிழ்நாடு

'பொங்கல் பரிசு ரூ.2,500 மிகப்பெரிய மோசடி'

Added : டிச 24, 2020
Share
Advertisement
சேலம்: ''தேர்தல் நெருங்கும் நேரத்தில், பொங்கல் பரிசாக, முதல்வர், 2,500 ரூபாய் அறிவித்துள்ளது மிகப்பெரிய மோசடி,'' என, சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி குற்றம்சாட்டினார்.இதுகுறித்து, அவர், சேலத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இடைப்பாடி நகராட்சி, 28வது வார்டில், வார்டு சபை கூட்டம் நடத்தி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். மாவட்டத்தில், இடைப்பாடி,

சேலம்: ''தேர்தல் நெருங்கும் நேரத்தில், பொங்கல் பரிசாக, முதல்வர், 2,500 ரூபாய் அறிவித்துள்ளது மிகப்பெரிய மோசடி,'' என, சேலம் மேற்கு மாவட்ட, தி.மு.க., பொறுப்பாளர் செல்வகணபதி குற்றம்சாட்டினார்.


இதுகுறித்து, அவர், சேலத்தில், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: இடைப்பாடி நகராட்சி, 28வது வார்டில், வார்டு சபை கூட்டம் நடத்தி, தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம். மாவட்டத்தில், இடைப்பாடி, சங்ககிரி, மேட்டூர் சட்டசபை தொகுதிகளில், இந்த கூட்டம், தொடர்ந்து, 10 நாள் நடக்கும். எட்டு ஒன்றியம், இரு நகராட்சி, 15 பேரூராட்சிகளில், 330 இடங்களில் கூட்டம் நடத்தப்பட உள்ளது. தமிழக அரசு மீதான, குற்றப்பத்திரிகையை வழங்கி, ஊழலை எடுத்துக்கூறியதில், முதல் கூட்டத்திலேயே, மக்கள், முழு ஆதரவு தெரிவித்து, ஒற்றை குரலாக, வரும் தேர்தலில், அ.தி.மு.க.,வை நிராகரிப்போம் என தெரிவித்துள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக, பதாகையில் கையெழுத்திட்டுள்ளனர். அதனால், சொந்த தொகுதியில், முதல்வர் பழனிசாமி, இடைப்பாடியில் தோற்பார். தி.மு.க., 200 தொகுதிகளில் வெற்றிபெறும். அதற்காக, தி.மு.க.,வினர் குழுவாக சென்று, திண்ணை பிரசாரத்தில் ஈடுபடுவோம். தேர்தல் நெருங்கும் நேரத்தில், பொங்கல் பரிசாக, முதல்வர், 2,500 ரூபாய் அறிவித்துள்ளது மிகப்பெரிய மோசடி. பணத்தை மட்டும் நம்பியுள்ள அ.தி.மு.க.,வால், ஜனநாயகத்தை வெல்ல முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X