பொது செய்தி

தமிழ்நாடு

கூலியை குறைத்து வழங்குவதாக எம்.பி.,யிடம் நெசவாளர்கள் புகார்

Added : டிச 24, 2020
Share
Advertisement
வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியில், தி.மு.க., சார்பில், கிராமசபை கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது. சேலம் எம்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். அவர், முத்தனம்பாளையத்தில், சவரத்தொழிலாளர், பட்டியலின மக்களிடம், குறைகளை கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து, கை.புதூர் பாவடியில், நெசவாளர்கள் இடையே, சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மக்களிடம் குறைகளை கேட்டார்.

வீரபாண்டி: ஆட்டையாம்பட்டி, எஸ்.பாப்பாரப்பட்டியில், தி.மு.க., சார்பில், கிராமசபை கலந்துரையாடல் கூட்டம், நேற்று நடந்தது. சேலம் எம்.பி., பார்த்திபன் தலைமை வகித்தார். அவர், முத்தனம்பாளையத்தில், சவரத்தொழிலாளர், பட்டியலின மக்களிடம், குறைகளை கேட்டு கலந்துரையாடினார். தொடர்ந்து, கை.புதூர் பாவடியில், நெசவாளர்கள் இடையே, சிறப்பு கிராம சபை கூட்டத்தில், மக்களிடம் குறைகளை கேட்டார். அப்பகுதி பெண்கள், பாவடியில் குப்பையை உடனுக்குடன் அகற்றாமல், குவித்து வைப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவுகிறது; பாப்பாரப்பட்டி பொது நூலகம் பின்புறம், கட்டி முடித்து, 10 ஆண்டுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் உள்ள பொதுக்கழிப்பிடத்தை, பயன்பாட்டுக்கு கொண்டுவர கோரிக்கை விடுத்தனர். நெசவாளர்கள், தங்களுக்கு அரசு நிர்ணயித்த கூலியை விட, குறைவாக, கைத்தறி நெசவாளர் சங்கங்கள் கொடுப்பதாக புகார் கூறினர். இதையடுத்து, எம்.பி., பார்த்திபன் பேசுகையில், ''வரவுள்ள சட்டசபை தேர்தலில், தி.மு.க., வெற்றி பெற்று, ஸ்டாலின் முதல்வர் ஆவார். அப்போது, இப்பகுதி மக்களின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X