ஓசூர்: ஓசூர், தளி சட்டசபை தொகுதியில், தி.மு.க., சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. ஓசூர், சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பி.எஸ்., திம்மசந்திரம், பி.குருபரப்பள்ளி, காட்டுநாயகன்தொட்டி, பேரிகை, கதிரேப்பள்ளி, மோரனப்பள்ளி பஞ்., பகுதிகளில், 'அ.தி.மு.க.,வை நிராகரிக்கிறோம்' என்ற தலைப்பில், தி.மு.க., சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., சத்யா பேசினார். அதேபோல், தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட பேலகொண்டப்பள்ளி, கொமாரனப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கெம்பட்டி, சாத்தனூர், ஜாகிர்கோடிப்பள்ளி ஆகிய ஆறு பஞ்.,ல், மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தலைமையில், கிராம சபை கூட்டம் நடந்தது.
* வேப்பனஹள்ளி ஒன்றியத்தில், நேற்று நடந்த கிராம சபைக்கூட்டத்தில், வேப்பனஹள்ளி எம்.எல்.ஏ., முருகன், பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE