பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியத்தில், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குந்துமாரனப்பள்ளி, எச்.செட்டிப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை ஆகிய பகுதிகளில், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றியத்தில், அ.தி.மு.க., சார்பில் ஓட்டுச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. தளி சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட குந்துமாரனப்பள்ளி, எச்.செட்டிப்பள்ளி, கெலமங்கலம், அனுசோனை ஆகிய பகுதிகளில், கெலமங்கலம் மேற்கு ஒன்றிய, அ.தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது. மேற்கு மாவட்ட செயலாளர் பாலகிருஷ்ணாரெட்டி தலைமை வகித்தார். கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் முனுசாமி எம்.பி., ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு, ஆலோசனை வழங்கினார். அப்போது, தளி தொகுதியில், அ.தி.மு.க., வெற்றி பெற வேண்டும். தமிழக அரசு செய்துள்ள திட்டங்களை எடுத்துக்கூறி, அ.தி.மு.க., வெற்றிக்கு உழைக்க வேண்டும் என, கட்சியினரை கேட்டுக் கொண்டார். கூட்டத்தில், ஒன்றிய செயலாளர் ஜெயபால், ஓசூர் மாநகர செயலாளர் நாராயணன், ஜெ., பேரவை மாவட்ட செயலாளர் சிட்டி ஜெகதீஸ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X