பொது செய்தி

தமிழ்நாடு

'புதிய வகை கொரோனா வைரஸ்; மக்கள் அச்சப்பட தேவையில்லை'

Added : டிச 24, 2020
Share
Advertisement
கிருஷ்ணகிரி: ''புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என, கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசினார்.கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த, புதிய வகை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, கடந்த

கிருஷ்ணகிரி: ''புதிய வகை கொரோனா வைரஸ் குறித்து, மக்கள் அச்சப்பட தேவையில்லை,'' என, கிருஷ்ணகிரி, மாவட்ட கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி பேசினார்.


கிருஷ்ணகிரியில் நேற்று நடந்த, புதிய வகை கொரோனா வைரஸ் நோய் தடுப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில், அவர் பேசியதாவது: பிரிட்டனில், புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு, கடந்த மாதம், 25 முதல், டிச., 22 வரை, 132 பேர் பிற நாடுகளில் இருந்தும், மூன்று ஆண், மூன்று பெண்கள் என ஆறு பேர் பிரிட்டனில் இருந்தும் வந்துள்ளனர். ஐந்து பேர் ஓசூர், ஒருவர் காவேரிப்பட்டணத்தை சார்ந்தவர். இவர்கள் தனிமை படுத்தப்பட்டு, அனைவருக்கும் ரத்த மாதிரிகள் சேகரித்து அனுப்பப்பட்டுள்ளது. இவர்களுக்கு எந்தவித அறிகுறியும் கண்டறியப் படவில்லை. வெளிநாடுகளிலிருந்து வருவோரை கட்டயம், 14 நாட்கள் தனிமைப்படுத்தி, அவர்களை அதிகாரிகள் முழுமையாக கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள், 24 மணி நேரமும் மாவட்ட கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண் 1077ஐ தொடர்பு கொள்ளலாம். புதிய வகை கொரோனா வைரசால், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம். தொடர்ந்து அரசின் நிலையான வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில், டி.ஆர்.ஓ., சதீஷ், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் செந்தில்முருகன், சுகாதார பணிகள் துணை இயக்குனர் கோவிந்தராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X