கோபி: ''சட்டசபை தேர்தலுக்கு முன்பே, தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவதா என்ன என்பது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம்,'' என, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
ஈரோடு மாவட்டம், நம்பியூர் தாலுகாவுக்கு உட்பட்ட, ஏழு பள்ளிகளை சேர்ந்த, பிளஸ் 1 மாணவ, மாணவியர், 692 பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று இலவச சைக்கிள்கள் வழங்கினார். பின்னர், அவர் கூறியதாவது: தை பொங்கல் பரிசாக, 2,500 ரூபாயை, அரசு உங்களுக்கு தருகிறது. அது உங்கள் வரிப்பணம் தான். இதை சிலரால் பொறுத்த கொள்ள முடியவில்லை. நீங்கள் கவலைப்பட தேவையில்லை. தமிழகத்தில் இன்னும் பல திட்டங்கள் உங்களை நோக்கி வரப்போகிறது. அவ்வாறு வரும்போது, எத்தனை பேருக்கு, காய்ச்சல் மற்றும் வயிற்று வலி வரப்போகிறது என தெரியாது. நீங்கள் பார்த்து கொண்டே இருங்கள், இந்த அரசு இன்னும் மக்களுக்காக என்னென்ன செய்யப்போகிறது என்று. சட்டசபை தேர்தலுக்கு முன், தமிழகத்தில் அனைத்து வகுப்புகளுக்கும், ஆண்டு இறுதித்தேர்வை நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசித்து வருகிறோம். ஆனால், இன்னும் அதுகுறித்து எந்த முடிவுகளும் மேற்கொள்ளவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE