தட்டைப்பயிறு விலை சரிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தட்டைப்பயிறு விலை சரிவு

Added : டிச 24, 2020
Share
மேச்சேரி: மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரிப்பால், கொள்முதல் விலை சரிந்தது. சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுப்பகுதியில், விவசாயிகள் மானாவாரி பயிர்களில் ஒன்றான தட்டைப்பயிறை, அதிகளவில் சாகுபடி செய்வர். தற்போது, அறுவடை தொடங்கிய நிலையில், மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 3 டன் வரை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதனால், அதன் விலை,

மேச்சேரி: மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரிப்பால், கொள்முதல் விலை சரிந்தது. சேலம் மாவட்டம், மேச்சேரி சுற்றுப்பகுதியில், விவசாயிகள் மானாவாரி பயிர்களில் ஒன்றான தட்டைப்பயிறை, அதிகளவில் சாகுபடி செய்வர். தற்போது, அறுவடை தொடங்கிய நிலையில், மேச்சேரி சந்தைக்கு, தட்டைப்பயிறு வரத்து அதிகரித்துள்ளது. நேற்று, 3 டன் வரை விற்பனைக்கு கொண்டுவந்தனர். இதனால், அதன் விலை, குவிண்டால், 5,000 ரூபாய்க்கு வியாபாரிகள் கொள்முதல் செய்தனர். ஒரு மாதத்துக்கு முன், வரத்து, 1 முதல், 1.5 டன் வரை மட்டும் இருந்த நிலையில், குவிண்டால், 5,700 ரூபாய்க்கு கொள்முதல் செய்தனர். தற்போது, வரத்து அதிகரிப்பால், நேற்று, கொள்முதல் விலை சரிந்ததாக வியாபாரிகள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X