பொது செய்தி

தமிழ்நாடு

ரவுடி கொலையில் 4 பேர் கைது; கரூர், நாமக்கல்லில் 16 பேர் சரண்: வழக்கை சீர்குலைத்து வேலூர் ரவுடிகளை காப்பாற்ற முயற்சி

Added : டிச 24, 2020
Share
Advertisement
சேலம்: சேலத்தில், ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, கரூர், நாமக்கல்லில், 16 பேர் சரணடைந்தனர். இதனால், இந்த வழக்கை சீர்குலைத்து, வேலூர் ரவுடிகளை காப்பாற்ற முயற்சி நடப்பதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர்.சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, புரு?ஷாத்தமன் மகன் செல்லதுரை, 40. இவர் மீது, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான்கு முறை,

சேலம்: சேலத்தில், ரவுடி கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில், நான்கு பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, கரூர், நாமக்கல்லில், 16 பேர் சரணடைந்தனர். இதனால், இந்த வழக்கை சீர்குலைத்து, வேலூர் ரவுடிகளை காப்பாற்ற முயற்சி நடப்பதாக, போலீசார் சந்தேகிக்கின்றனர்.


சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த, புரு?ஷாத்தமன் மகன் செல்லதுரை, 40. இவர் மீது, 22 வழக்குகள் நிலுவையில் உள்ளன. நான்கு முறை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இவரை, நேற்று முன்தினம் இரவு, கொடூரமான முறையில், ஒரு கும்பல் வெட்டி கொலை செய்தது. அவர்களை கைது செய்ய, நான்கு தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை நடந்தது. இதில், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடிகளான, சதீஷ், 25, ஜெயக்குமார், 30, பழனிசாமி, 40, சூரி, 64, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, சேலத்தை சேர்ந்த விக்னேஷ், ரஞ்சித்குமார், பாண்டியராஜ், சாணக்யா, மணிகண்டன், மற்றொரு விக்னேஷ், ராஜூ ஆகியோர், நேற்று, கரூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களை, 15 நாள் காவலில் வைக்க, நீதிபதி சரவணபாபு உத்தரவிட்டார். இதனால், குளித்தலை கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

அதேபோல், சேலம், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த காதர்பாஷா, 26, பிரபு, 29, மணிகண்டன், 23, யுவராஜ், 33, சாரதி, 24, பாலமுருகன், 33, சின்னவர், 23, சுரேஷ், 34, 16 வயது சிறுவன் ஆகியோர், நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். அவர்களில், சிறுவன் தவிர்த்து, எட்டு பேரை, வரும், 30 வரை, நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி கபாலீஸ்வரன் உத்தரவிட்டதால், நாமக்கல் சப் - ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும், கிச்சிப்பாளையத்தை சேர்ந்த ரவுடி சிலம்பரசனை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

இதுகுறித்து, போலீசார் கூறியதாவது: இந்த கொலை வழக்கில், 16 பேர் சரணடைந்த நிலையில், நாளை (இன்று), மேலும், 10 பேர் சரண் அடைய உள்ளதாக, கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த வழக்கை சீர்குலைக்க, நீதிமன்றத்தில், 30 பேர் சரணடைய திட்டமிட்டுள்ளதும் தெரியவந்தது. இக்கொலையில், வேலூர் ரவுடிகளுக்கு முக்கிய பங்கு உள்ள நிலையில், அவர்களை காப்பாற்றவே, ரவுடிகள் வரிசையாக நீதிமன்றத்தில் சரணடைவதாக கிடைத்த தகவல்படியும், விசாரணை நடக்கிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X