பொது செய்தி

தமிழ்நாடு

புறவழிச்சாலையில் அதிகாரிகள் ஆய்வு

Added : டிச 24, 2020
Share
Advertisement
குளித்தலை: குளித்தலை உழவர் சந்தை, ரயில்வே ஸ்டேஷன், கிளை நூலகம் மற்றும் மணப்பாறை -முசிறி செல்லும் புறவழிச்சாலை, கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனக்கு சொந்தமான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் அத்து மீறி

குளித்தலை: குளித்தலை உழவர் சந்தை, ரயில்வே ஸ்டேஷன், கிளை நூலகம் மற்றும் மணப்பாறை -முசிறி செல்லும் புறவழிச்சாலை, கடந்த, 30 ஆண்டுகளுக்கு மேலாக பொது மக்கள் பயன்பாட்டில் இருந்து வந்தது. இந்த சாலையில், நகராட்சி நிர்வாகம் சார்பில் பல லட்சம் ரூபாய் மதிப்பில் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த, ஐந்து ஆண்டுகளுக்கு முன், தனக்கு சொந்தமான நிலத்தில், நகராட்சி நிர்வாகம் அத்து மீறி தார்ச்சாலை அமைத்துள்ளதாக கூறி, நீதிமன்றம் உத்தரவின்படி, தார்ச்சாலையை தடுப்பு வேலி போட்டு, தனிநபர் தடுத்து விட்டார். இதனால், கிராம மக்கள் பாதிக்கப்பட்டனர். இந்த புறவழிச்சாலையை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவரக்கோரி, பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் பல போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கலெக்டர் மலர்விழி தலைமையில், சப்- கலெக்டர் ?ஷக் அப்துல் ரகுமான், தாசில்தார் முரளிதரன், நகராட்சி கமிஷனர் முத்துக்குமார் ஆகியோர், சம்பந்தப்பட்ட தார்ச்சாலையை ஆய்வு செய்தனர். தொடர்ந்து, 'சம்பந்தப்பட்ட நிலம், அரசு புறம்போக்கு நிலத்தில் இருந்தால் ஆக்கிரமிப்புக்களை அகற்றிடவும், பட்டா நிலத்தில் இருந்தால் அதற்குரிய அரசு நிர்ணயம் செய்த தொகையை முறையாக செலுத்திவிட்டு, பொது மக்கள் பயன்பாட்டுக்கு பெற்று தரவேன்டும்' என, நகராட்சி கமிஷனருக்கு, கலெக்டர் உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X