பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் காவிரி கரையில், மிகவும் பழமையான பிரசித்தி பெற்ற ஆதிகேசவ பெருமாள் கோவில் உள்ளது. கடந்த, 25 ஆண்டுகளாக வைகுண்ட ஏகாதசி விழா மிக சிறப்பாக நடந்து வருகிறது. இந்தாண்டு விழா, நாளை அதிகாலை, 4:00 மணிக்கு துவங்குகிறது. 5:00 மணிக்கு விசேஷ பூஜை, 5:40 மணிக்கு பரமபத வாசல் திறப்பு விழா நடக்க உள்ளது. பெருமாளுக்கு பூக்களை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடக்கிறது. விழாவிற்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டுகள் வழங்குவதற்காக, சர்க்கரை, 350 கிலோ, முந்திரி, 10 கிலோ, நெய், 16 கிலோ, திராட்சை, 10 கிலோ, ஏலக்காய், 3 கிலோ, கடலை மாவு, 160 கிலோ, எண்ணெய், 10 டின் ஆகியவை கொண்டு, 20 ஆயிரம் லட்டுகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மேலும், அன்று நாள் முழுவதும் வெண் பொங்கல், பால் பாயாசம், ரவா கேசரி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. பக்தர்கள் அனைவரும், சமூக இடைவெளியை கடைப்பிடித்து, முக கவசம் அணிந்து வருமாறு விழா கமிட்டியினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE