நாமக்கல்: 'அ.தி.மு.க.,வை நிராகரிப்போம்' என்ற தலைப்பில், தமிழகம் முழுவதும், ஒன்றிய, நகர, பேரூர் கழகங்களில், வரும், ஜன., 4 வரை, 10 நாட்களுக்கு கிராம சபை மற்றும் வார்டுகளில் கூட்டங்கள் நடத்த, தி.மு.க., தலைமை சார்பில் உத்தரவிடப்பட்டது. அதில், அ.தி.மு.க.,வுக்கு எதிரான மக்களின் தீர்மானம், குரல் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள ஒன்றிய, நகர, பேரூர் பகுதிகளில், பத்து நாட்களுக்கு, தலா, 25 கிராமசபை கூட்டங்கள் என, 250 கூட்டம் நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக, நாமக்கல் ஒன்றியம், சிங்கிலிப்பட்டி கிராமத்தில், நேற்று துவங்கியது. ஒன்றிய செயலாளர் பழனிவேல் தலைமை வகித்தார். மாவட்ட பொறுப்பாளர் ராஜேஷ்குமார் பேசினார். ஊராட்சி தலைவர் சரளா, மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் சரஸ்வதி உள்பட பலர் பங்கேற்றனர். அதேபோல், புதுச்சத்திரம், மோகனூர், கொல்லிமலை, சேந்தமங்கலம், எருமப்பட்டி, வெண்ணந்தூர், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை ஒன்றியம், நாமக்கல் நகரம், மோகனூர், சீராப்பள்ளி, அத்தனூர், புதுப்பட்டி உள்ளிட்ட, பேரூர் பகுதிகளில் கிராமசபை கூட்டங்கள் நடந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE