நாமக்கல்: நாமக்கல் நகராட்சி சந்தையை, 6.50 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலை, நகராட்சி அலுவலகம் அருகில் காய்கறி, ஆடு, கோழி மற்றும் மளிகை பொருள்கள் விற்பனை செய்யும் சந்தை உள்ளது. இந்த சந்தை சனிக்கிழமையன்று கூடும். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வியாபாரிகளும், விவசாயிகளும் இங்கு வந்து பொருள்களை விற்பனை செய்வர். தற்போது, நகராட்சி சந்தையை விரிவாக்கம் செய்யவும், அதிகளவிலான வியாபாரிகள் பொருள்கள் விற்பனை செய்யும் வகையிலும் வடிவமைப்பது குறித்து நகராட்சி அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. எம்.எல்.ஏ., பாஸ்கர், நகராட்சி கமிஷனர் பொன்னம்பலம், நிர்வாக பொறியாளர் ராஜேந்திரன், சுகாதார அலுவலர் சுகவனம் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அதில், நகராட்சி சந்தையை, 6.50 கோடி ரூபாயில் விரிவாக்கம் செய்து விரைவாக செயல்படுத்திட வேண்டும் என அறிவுறுப்பட்டது. இதுகுறித்து, கமிஷனர் பொன்னம்பலம் கூறியதாவது; நகராட்சி சந்தையை விரிவாக்கம் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து, இறுதி முடிவு எடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகே கட்டடப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு விபரம் தெரிய வரும். இவ்வாறு, அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE