பொது செய்தி

தமிழ்நாடு

கொள்முதல் கரும்பு: அதிகாரிகள் பார்வை

Added : டிச 24, 2020
Share
Advertisement
பள்ளிபாளையம்: சமயசங்கிலியில், கரும்புகளை கொள்முதல் செய்ய, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள், பள்ளிபாளையம்

பள்ளிபாளையம்: சமயசங்கிலியில், கரும்புகளை கொள்முதல் செய்ய, அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கலுக்கு, ஒவ்வொரு ரேஷன் கார்டுக்கும், பொங்கல் பரிசாக, பச்சரிசி, வெல்லம், ஏலக்காய் உள்பட பல பொருட்களுடன், கூடுதலாக கரும்பு வழங்கப்படுகிறது. இந்தாண்டு, முழு கரும்பு வழங்கப்படுகிறது. இதற்காக, கரும்புகளை கொள்முதல் செய்ய அதிகாரிகள், பள்ளிபாளையம் அடுத்த கரமேடு, சமய சங்கிலி, செங்குட்பாளையம், தொட்டிபாளையம், பேரேஜ் பகுதி, ஆவத்திபாளையம், மற்றும் சுற்று வட்டார பகுதியில் கரும்புகளை நேரில் பார்வையிட்டனர். இதுகுறித்து, கரமேடு பகுதியை சேர்ந்த விவசாயி பொன்னுசாமி கூறியதாவது: பொங்கலுக்கு பொதுமக்களுக்கு கரும்புகளை வழங்க, கடந்த சில நாட்களாக அதிகாரிகள் நேரில் வந்து அனைத்து பகுதியில் சாகுபடி செய்த, கரும்புகளை பார்வையிட்டுள்ளனர். தொடர்ந்து விரைவில் அறுவடை பணி துவங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X