சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தி.மு.க., நிர்வாகி கொலையை தடுக்க முயன்ற நண்பரும் சாவு

Added : டிச 24, 2020
Share
Advertisement
குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தி.மு.க., வார்டு செயலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை தடுக்க முயன்ற நபரும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.குமாரபாளையம், காவேரி நகர் பூசாரி காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 41. கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் நகர தி.மு.க., 1வது வார்டு செயலர். கடந்த, 20 இரவு நண்பர்களுடன் காவேரி நகரில் பேசிக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த

குமாரபாளையம்: குமாரபாளையத்தில், தி.மு.க., வார்டு செயலர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலையை தடுக்க முயன்ற நபரும், சிகிச்சை பலனின்றி இறந்தார்.


குமாரபாளையம், காவேரி நகர் பூசாரி காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன், 41. கைத்தறி ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் நகர தி.மு.க., 1வது வார்டு செயலர். கடந்த, 20 இரவு நண்பர்களுடன் காவேரி நகரில் பேசிக்கொண்டிருந்த போது பைக்கில் வந்த இருவரில் ஒருவர், சரவணனை கீழே தள்ளி கழுத்தில் மற்றும் வயிற்றில் பல முறை கத்தியால் குத்தியதில் சரவணன் சம்பவ இடத்திலேயே இறந்தார். கொலையை தடுக்க வந்த சரவணனின் நண்பர்கள் பிரபாகரன், 46, முரளிதரன், 24, ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்ததால், பலத்த காயமடைந்து சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, முரளிதரன் இறந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X