கோர்ட் செய்தி

தமிழ்நாடு

சிறுமிக்கு பாலியல் தொல்லைஇருவருக்கு ஆயுள்சிறை

Added : டிச 24, 2020
Share
Advertisement
கோவை: பள்ளி வேனில் சென்ற எல்.கே.ஜி., மாணவிக்கு, பாலியல் தொந்தரவு செய்த டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஆயுள்சிறைவிதித்து,கோவை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், காரமடை, கண்ணார்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, 50, பிளிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ்,37, ஆகியோர், தனியார் பள்ளி வேனில் பணியாற்றி வந்தனர். கோவிந்தராஜ் டிரைவராகவும், மாரிமுத்து கிளீனராகவும்

கோவை: பள்ளி வேனில் சென்ற எல்.கே.ஜி., மாணவிக்கு, பாலியல் தொந்தரவு செய்த டிரைவர் மற்றும் கிளீனருக்கு ஆயுள்சிறைவிதித்து,கோவை போக்சோ கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.கோவை மாவட்டம், காரமடை, கண்ணார்பாளையத்தை சேர்ந்த மாரிமுத்து, 50, பிளிச்சியை சேர்ந்த கோவிந்தராஜ்,37, ஆகியோர், தனியார் பள்ளி வேனில் பணியாற்றி வந்தனர். கோவிந்தராஜ் டிரைவராகவும், மாரிமுத்து கிளீனராகவும் இருந்தனர்.கடந்த 2019, ஜன., 29ல், எல்.கே.ஜி., படிக்கும் நான்கு வயது சிறுமி, கடைசி ஸ்டாப்பில் இறங்குவதற்கு வேனில் காத்திருந்தார். அப்போது, இருவரும் சேர்ந்து, சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்தனர்.துடியலுார் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இருவரையும், 'போக்சோ' சட்டத்தில் கைது செய்து மத்திய சிறையிலடைத்தனர்.கோவை போக்சோ சிறப்பு கோர்ட்டில் இருவர் மீதும், வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.விசாரித்த நீதிபதி ராதிகா, சிறுமியை பாலியல் தொந்தரவு செய்த மாரிமுத்து, கோவிந்தராஜ் ஆகியோருக்கு ஆயுள்சிறை, தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு, அரசு சார்பில் நான்கு லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X