கோவை : பிரிட்டனில் இருந்து கோவை வந்த 133 பேரில், இதுவரை 97 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.
வரும் 31ம் தேதி வரை, பிரிட்டனுக்கான விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. விமான நிலையங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.பிரிட்டனில் இருந்து பல்வேறு விமான நிலையங்கள் வழியாக, கோவைக்கு, 133 பயணிகள் வந்துள்ளனர். இவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யும் பணியில் சுகாதாரத் துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 97 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதற்கான, முடிவுகள் இன்னும் வரவில்லை.
மாவட்ட சுகாதார துறை துணை இயக்குனர் ரமேஷ்குமார் கூறுகையில்,''கோவை வந்த, 133 பேருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும். கோவையில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சென்றிருந்தாலும் அவர்களின் விபரங்களும் அந்தந்த மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று இல்லை என்று தெரியவந்தாலும், 12 நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்படுவர்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE