சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

துல்லியமான அணுக் கடிகாரம்!

Added : டிச 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
உலகிற்கு நேரம் காட்டும் நேர அளவுகோலாக இருப்பது அணுக் கடிகாரம். இந்தக் கடிகாரத்தைக்கூட, மேலும் துல்லியமாக நேரம் காட்டும்படி செய்ய முடியும் என்பதை விஞ்ஞானிகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, கடந்த, 1968லிருந்து, சர்வதேச நேர அளவு கோலாக இதுவே இருந்து வருகிறது.தற்போது,
 துல்லியமான அணுக் கடிகாரம்!

உலகிற்கு நேரம் காட்டும் நேர அளவுகோலாக இருப்பது அணுக் கடிகாரம். இந்தக் கடிகாரத்தைக்கூட, மேலும் துல்லியமாக நேரம் காட்டும்படி செய்ய முடியும் என்பதை விஞ்ஞானிகள் அவ்வப்போது நிரூபித்து வருகின்றனர்.

சீசியம்-133 ன் அணுக்கள் நொடிக்கு பல கோடி முறை அசைகின்றன. இந்த எண்ணிக்கை ஒரே மாதிரி இருக்கின்றன. எனவே, கடந்த, 1968லிருந்து, சர்வதேச நேர அளவு கோலாக இதுவே இருந்து வருகிறது.

தற்போது, அமெரிக்காவிலுள்ள மாசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியி லுள்ள விஞ்ஞானிகள், யட்டெர்பியம்-117 என்ற பொருளின் 350 அணுக்களை, இரண்டு லேசர் கதிர்கள் மூலம் அளந்துள்ளனர். இது முந்தைய அணுக் கடிகார முறைகளைவிட அதிக துல்லியமானது என 'நேச்சர்' இதழில் வெளியாகியுள்ள ஒரு ஆய்வு தெரிவித்துள்ளது.

பேரண்டத்தின் ஆயுட்காலம் முழுவதையும் யட்டெர்பியம்-117 கடிகாரம் அளப்பதாக வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுகூட, அது வெறும் 100 மில்லி செகண்ட் நேர வேறுபாட்டையே காட்டும் என இதை உருவாக்கிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Riya - ,
24-டிச-202013:24:04 IST Report Abuse
Riya ஒண்ணுமே புரியல, அப்ப இப்ப இருக்கிற digital நேரம் சரியானது இல்லையா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X