விவசாயிகள் முன் எந்த சக்தியும் நிற்க முடியாது: ராகுல்

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (48)
Share
Advertisement
புதுடில்லி: விவசாயிகளுக்கு முன் எந்த சக்தியும் நிற்க முடியாது என ஜனாதிபதியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக , நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் காங்கிரசார் கையெழுத்து பெற்றனர். அதனை ஜனாதிபதியிடம் நேரில் சென்று வழங்க திட்டமிடப்பட்டது.இதற்காக,
Congress, Rahul, Rahul Gandhi, காங்கிரஸ், ராகுல், ராகுல் காந்தி, Farmlaw, priyanka, priyankagandhi,

புதுடில்லி: விவசாயிகளுக்கு முன் எந்த சக்தியும் நிற்க முடியாது என ஜனாதிபதியை சந்தித்த பின்னர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக , நாடு முழுவதும் 2 கோடி பேரிடம் காங்கிரசார் கையெழுத்து பெற்றனர். அதனை ஜனாதிபதியிடம் நேரில் சென்று வழங்க திட்டமிடப்பட்டது.


latest tamil news


இதற்காக, டில்லி விஜய் சவுக் பகுதியில் இருந்து ராகுல் தலைமையில் ஏராளமானோர், பேரணியாக சென்று, ஜனாதிபதியை சந்திக்க தயாராகினர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். ஆத்திரமடைந்த, காங்கிரசார் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து, ராகுல் சகோதரி பிரியங்கா உள்ளிட்ட நிர்வாகிகளை கைது செய்து மந்திர் மார்க் போலீஸ் ஸ்டேசனுக்கு போலீசார் அழைத்து சென்றனர்.


latest tamil news


Advertisement



பிரியங்கா பேட்டி



போலீஸ் ஸ்டேசன் அழைத்து செல்லும் வழியில், பிரியங்கா கூறுகையில், நாம் ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம். தடுத்து நிறுத்தப்பட்டவர்கள் எம்.பி.,க்கள். ஜனாதிபதியை சந்திக்க அவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்களை அனுமதிக்க வேண்டும். அதில், என்ன பிரச்னை உள்ளது. எல்லையில் போராட்டம் நடத்தும் லட்சகணக்கான விவசாயிகளின் குரல்களை கேட்க அரசு தயாராக இல்லை. விவசாயிகளுக்கு அவர்கள் சூட்டிய பெயர்கள், பாவம். விவசாயிகளை தேச விரோதிகள் என அரசு அழைப்பது பாவம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news





3 பேர் சந்திப்பு


ராகுல், குலாம் நபி ஆசாத், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோருக்கு மட்டும், ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்து அவர்கள், ஜனாதிபதியை சந்தித்து மனுவை வழங்கினர்.


latest tamil news




ஜனாதிபதியை சந்தித்த பின்னர் ராகுல் கூறியதாவது: வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என ஜனாதிபதியிடம் தெரிவித்தேன். நாடு முழுவதும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த சட்டத்தை திரும்ப பெறும் வரை விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட மாட்டார்கள் என்பதை பிரதமரிடம் தெரிவித்து கொள்கிறேன்.


வசதி படைத்தவர்கள் அல்ல


பார்லிமென்டின் சிறப்பு கூட்டத்தை கூட்டி, வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக எதிர்க்கட்சிகள் நிற்கும். அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் வசதி படைத்தவர்கள் அல்ல. யாரை பயங்கரவாதிகள் எனக்கூறுகிறீர்களோ அவர்களே நாட்டிற்கு வளத்தை அளிப்பவர்கள். விவசாயிகளின் பிரச்னைகளை ஜனாதிபதியிடம் எடுத்துக்கூறினோம்.


latest tamil news




விவசாயிகள் தான் நாட்டின் முதுகெலும்பாக உள்ளனர். விவசாய அமைப்பை அழித்து விடாதீர்கள். விவசாயிகளுக்கு முன்னர் எந்த சக்தியும் நிற்க முடியாது. விவசாயிகள் நலனுக்காக வேளாண் சட்டம் கொண்டு வருவதாக கூறும் அரசு, விவசாயிகளின் குரல்களை கேட்க வேண்டும். வேளாண் சட்டங்களால், எந்த பயனும் இல்லை. விவசாயிகள், சிறு வர்த்தகர்கள் நலனை அரசு கருத்தில் கொள்ளவில்லை.

இந்தியாவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தப்படவில்லை. அரசு உடனடியாக நடவடிக்கையில் ஈடுபடாவிட்டால், பெருமளவு வேலையிழப்பு ஏற்படும். நாட்டில் அனைத்து தரப்பினரும் போராடி கொண்டுள்ளனர். நாடு ஆபத்தான பாதையில் செல்கிறது. ஜனநாயகம் இல்லாத சூழல் நிலவுகிறது. ஜனநாயகம் உள்ளது என சிலர் நினைத்தால், அது அவர்களின் கற்பனையாக இருக்கும். மோடிக்கு எதிராக போராடுபவர்கள், அது விவசாயிகள், தொழிலாளர்கள் என யாராக இருந்தாலும் சரி பயங்கரவாதிகள் என அழைக்கப்படுகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (48)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25-டிச-202005:03:13 IST Report Abuse
J.V. Iyer ராகுல்ஜி உண்மை. ஆனால் நீங்கள் நிற்பது தவறான இடத்தில். இடைத்தரகர்களை ஆதரிக்கிறீர்கள். நன்றாக இருக்கிறதா உங்கள் செயல்?
Rate this:
Cancel
P. Siresh - Chennai,இந்தியா
24-டிச-202022:10:11 IST Report Abuse
P. Siresh நாடு ஆபத்தை நோக்கி பொய்கொண்டிருக்குது,அது இதுனு எல்லாம் எத்தனை கதை சொன்னாலும் விழுந்தது.,விழுந்ததால் காங்கிரஸ்.எழுந்து கொள்ள முடியாது.காங்கிரஸ் ஆண்டாதன் நாடு நல்ல இருக்குன்னு அர்த்தமா?முதல்ல இந்தியண்டுள்ள.தேர்தலில் தனியா நின்று காங்கிரசின்.பாரம்பரியத்தை மீட்டு எடுங்கள்
Rate this:
Cancel
P. Siresh - Chennai,இந்தியா
24-டிச-202022:04:10 IST Report Abuse
P. Siresh ராகுல் ஜனநாயகம் இல்லை என்கிறார்.அதுதான் கடந்த 60 வருடங்களாகவே இல்லை.ராகுல் இதை தாமதமாக புரிந்து கொண்டுள்ளார்.எமர்ஜென்ஸி ஜனநாயகமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X