சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

கையடக்க அல்ட்ராசவுண்டு கருவி!

Added : டிச 24, 2020
Share
Advertisement
மருத்துவர்கள் பயன்படுத்தும் அல்ட்ரா சவுண்டு கருவி, சிறிய சக்கர வண்டியில் வைத்து தள்ளி வருமளவுக்கு பெரியது. புதிதாக வந்திருக்கும் வேவ் என்ற புதிய அல்ட்ராசவுண்டு கருவியை பாக்கெட்டுக்குள் அடங்குமளவுக்கு சிறியது.வேவ் கருவியைக் கொண்டு, இதயம், நுரையீரல், வயிறு மற்றும் மகளிர் பிணி தொடர்பான; ஸ்கேனிங்' சோதனைகளை மேற்கொள்ள முடியும். இத்தனைக்கும் வேவ் கருவியின் எடை, 340 கிராம்
 கையடக்க அல்ட்ராசவுண்டு கருவி!

மருத்துவர்கள் பயன்படுத்தும் அல்ட்ரா சவுண்டு கருவி, சிறிய சக்கர வண்டியில் வைத்து தள்ளி வருமளவுக்கு பெரியது. புதிதாக வந்திருக்கும் வேவ் என்ற புதிய அல்ட்ராசவுண்டு கருவியை பாக்கெட்டுக்குள் அடங்குமளவுக்கு சிறியது.

வேவ் கருவியைக் கொண்டு, இதயம், நுரையீரல், வயிறு மற்றும் மகளிர் பிணி தொடர்பான; ஸ்கேனிங்' சோதனைகளை மேற்கொள்ள முடியும். இத்தனைக்கும் வேவ் கருவியின் எடை, 340 கிராம் தான்.

ஒரு லித்தியம் அயனி மின்கலனை 4 மணி நேரம் மின்னேற்றம் செய்தால், தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு வேவ் கருவியால் ஸ்கேன் செய்து தரும். ஒரு மொபைல் செயலி மூலம், இந்த ஸ்கேனரிலிருந்து உருவப்படங்கள் அலசப்பட்டு, இணையம் வழியே அவற்றை சேகரித்து வைத்துக்கொள்ளலாம்.

வேவ் அல்ட்ராசவுண்டு ஸ்கேனர் கருவியை தயாரிக்கும் அமெரிக்க நிறுவனம், அதை சந்தா முறையில் விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது. மாதம் ரூ.7,300 கட்டினால், இக்கருவியை மருத்துவர்கள் வாங்கி வைத்து பயன்படுத்த முடியும். ஒரு பெரிய கருவி, சாதாரண ஸ்டெத்தாஸ்கோப் போல ஆகியிருப்பது வரவேற்கத்தக்கது தானே?

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X