அமெரிக்க விமானப் படையினர் அண்மையில் ஒரு புதுமையை நிகழ்த்தியுள்ளனர். ஒரு போர் விமானத்தில், மனித விமானிக்கு இணை விமானியாக ஒரு செயற்கை நுண்ணறிவு மென்பொருள், வெற்றிகரமாக செய்யபட்டுள்ளது. கடந்த டிசம்பர், 15 அன்று, யு-2 டிராகன் லேடி என்ற வேவு பார்க்கும் விமானம் வானில் பறந்தது. இந்த விமானத்தின் இணை பைலட்டாக இருந்த ஆர்ட்டூம்யூ (ARTUµ) செயற்கை நுண்ணறிவு மென்பொருள், எதிரி விமானத்தின் தாக்குதல்களை சமாளித்ததோடு, மனித விமானி செய்யும் வேலைகளில் பாதி வேலைகளையும் கச்சிதமாக செய்து அசத்தியது.
இது ஒரு ஒத்திகைதான் என்றாலும், கடந்த மூன்று ஆண்டுகளாக, ஆர்ட்டூம்யூ மென்பொருளுக்கு பல திறமையான விமானிகள் தந்த பயிற்சியைத்தான் அது களத்தில் செய்து காட்டியது.இணை விமானியாக ஆர்ட்டூம்யூவை பயன்படுத்துவதால், இரண்டு விமானிக்கு பதில் ஒரு விமானியே போதும் என்ற நிலை உருவாகும். இதனால் அமெரிக்க விமானப்படைக்கு, எத்தனை மிச்சமாகும் என்பதை நீங்களே கணக்குப்போட்டுப் பார்த்துக்கொள்ளுங்கள்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE