சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூன்று நாட்களில் டி.என்.ஏ.,வை வரிசைப்படுத்தலாம்!

Added : டிச 24, 2020
Share
Advertisement
மனித மரபணுவில் புதைந்துள்ள தகவல்களை 'வாசிப்பது' மிகவும் ஹைடெக்கான வித்தை. மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ.,க்களை வரிசைப்படுத்தினால்தான், மரபணு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்த முடியும்.இன்றைய தேதிக்கு, மரபணுவிலுள்ள டி.என்.ஏ.,க்களை வரிசைப்படுத்த 15 நாட்கள் வரை பிடிக்கிறது.ஆனால், அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டி.என்ஏ வரிசைப்படுத்துதலை
 மூன்று நாட்களில் டி.என்.ஏ.,வை வரிசைப்படுத்தலாம்!

மனித மரபணுவில் புதைந்துள்ள தகவல்களை 'வாசிப்பது' மிகவும் ஹைடெக்கான வித்தை. மரபணுக்களில் உள்ள டி.என்.ஏ.,க்களை வரிசைப்படுத்தினால்தான், மரபணு ஆராய்ச்சிகளை விஞ்ஞானிகள் நடத்த முடியும்.இன்றைய தேதிக்கு, மரபணுவிலுள்ள டி.என்.ஏ.,க்களை வரிசைப்படுத்த 15 நாட்கள் வரை பிடிக்கிறது.

ஆனால், அமெரிக்காவிலுள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், டி.என்ஏ வரிசைப்படுத்துதலை ஒன்றிலிருந்து மூன்று நாட்களுக்குள் செய்து முடிக்கும் மென்பொருளை உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

அதுவும், இந்த மென்பொருள் 'ஓப்பன் சோர்ஸ்' எனப்படும், திறமூல முறை மூலம் எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.அன்கால்டு என்று அழைக்கப்படும் புதிய மென்பொருளை, 'நேனோபோர் சீக்வன்சர்' என்ற ஒரு கையடக்கக் கருவியில் உள்ளிட்டு, எங்கும் எளிதில் எடுத்துச் செல்ல முடியும். ரூ.75 ஆயிரம் விலையுள்ள இந்த கருவியை ஒரு மடிக் கணினியில் இணைத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு, ரத்தம் அல்லது எச்சில் போன்ற மாதிரிகளை கருவியினுள் செலுத்தினால், அதிலுள்ள ட்ரில்லியன் கணக்கான டி.என்.ஏ., பொருட்களில் இக் கருவி அலசும்.அன்கால்டு மென்பொருள், ஆய்வாளர்கள், மரபணுவின் எந்த அம்சத்தை ஆராய விரும்புகிறார்களோ, அந்த அதை மட்டுமே வரிசைப்படுத்தும். எனவேதான், மூன்று நாட்களுக்குள்ளாக மரபணுவை வரிசைப்படுத்திவிட முடியும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X