ஜம்மு காஷ்மீரின் கந்தர்பால் என்ற பகுதியில் பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் 3 பேர் காயமுற்றனர்.

ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சினேகலதா. இவர் ராஜேஷ் என்பவருடன் நட்புறவு கொண்டிருந்தார். வங்கியில் வேலை கிடைத்ததும் சினேகலதா , ராஜேஷ் உறவை துண்டித்தார். இதனால் ஆத்திரமுற்ற அவர் அந்த அடித்து கழுத்தை நெறித்தும், அந்த பெண்ணை கொலை செய்தார். இருவரும் கடந்த ஒரு ஆண்டில் 1,618 முறை போனில் பேசியுள்ளனர்.
மஹாராஷ்ட்டிர மாநிலம் பல்கார் போலீஸ் ஸ்டேஷனில் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கேரளாவில் இடதுசாரியை சேர்ந்த இளைஞர் அமைப்பை சேர்ந்த ஒருவர் வெட்டி கொலை.

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 22 வயது இளைஞருக்கு உபி., மாநிலம் ஹமீர்பூர் கோர்ட் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
பல குற்ற வழக்குகளில் தொடர்பு உடைய மாவோ., நக்சல் பயங்கரவாதி ஜார்கண்டில் கைது.
தமிழகத்தின் நிகழ்வு !
* கோவில்பட்டி அருகேயுள்ள குளத்துவாய்பட்டி கிராமத்தினை சேர்ந்தவர் மோகன்ராஜ்(73). இவரது மகன் புருஷோத்தமன்(23). மன நலம் பாதிக்கப்பட்டிருந்தார். மாத்திரை சாப்பிடும்படி தந்தை கட்டாயப்படுத்தினார். இதனால் ஆத்திரமுற்ற மகன், தந்தையை உலக்கையால் தலையில் அடித்தார். இதில் ரத்த வெள்ளத்தில் மோகன்ராஜ் உயிரிழந்தார்.
*நாகை மாவட்டம் சீர்காழி அருகே அகணி கிராமத்தை சேர்ந்தவர் முருகையன்.32. எலக்ட்ரீசியன். இவரிடம் செல் போனில் பேசி வந்த பெண் ஒருவர் மாயமானது தொடர்பாக சிதம்பரம் காவல்துறை முருகையனை அழைத்து மூன்று நாட்கள் விசாரணை செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மனஉளச்சளில் இருந்த அவர் இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சீர்காழி போலீசார் உடலை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டுள்ளனர்.
உலக நடப்பு !
அமெரிக்காவின் தலைநகர் நியூயார்க்கில் பெண்ணுக்கு கொலை மற்றும் பலாத்கார மிரட்டல் விடுத்த இந்திய வம்சாவளியை சேர்ந்த தேஷ்மாண்ட் பப்லுசிங் 19 கைது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE