ஆமதாபாத்: இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 2022 சீசனில் கூடுதலாக 2 புதிய அணிகளை சேர்க்க பி.சி.சி.ஐ, அனுமதி கொடுத்தது.
இந்திய கிரிக்கெட் போர்டின் (பி.சி.சி.ஐ.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம் ஆமதாபாத்தில் நடந்தது. இதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன. இதன் படி இந்தியன் பிரிமியர் லீக் தொடரில் கூடுதலாக 2 அணிகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இம்முறை புதிய அணிகள் சேர்க்கப்படாது, சென்னை, மும்பை, கோல்கட்டா உள்ளிட்ட 8 அணிகள் மட்டும் எப்போதும் போல பங்கேற்கும். 2022 முதல் கூடுதலாக 2 அணிகளை சேர்த்து, 10 அணிகள் தொடரில் பங்கேற்கும், 94 போட்டிகள் நடக்கும். இதற்கு பி.சி.சி.ஐ., அனுமதி கொடுத்தது. தவிர, கொரோனா காரணமாக எவ்வித உள்ளூர் போட்டிகளும் நடக்கவில்லை. இதனால் உள்ளூர் வீரர், வீராங்கனைகளுக்கு தகுந்த இழப்பீடு தர முடிவு செய்யப்பட்டது. அம்பயர்கள் ஓய்வு வரம்பு 55 முதல் 60 ஆக உயர்த்தப்பட்டது.

2028 ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டை சேர்க்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் முடிவுக்கு பி.சி.சி.ஐ., ஆதரவு தெரிவித்தது. இதுகுறித்து சில விளக்கங்களை கேட்டுப்பெற முடிவு செய்யப்பட்டது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE