புதுடில்லி: நாடு முழுவதும் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளில், ஜன.1 -முதல் 'பாஸ்டேக்' கட்டண நடைமுறை, கட்டாயம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
தேசிய நெடுஞ்சாலைகளை பயன்படுத்தும் வாகனங்களிடம் சுங்கச்சாவடிகளில் கட்டணம் வசூலிப்பதற்காக மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும் பாஸ்டேக் முறை கடந்த 2019 டிசம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பாஸ்டேக்' மின்னணு முறையில் அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இதை வாங்கி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும்; சுங்கச் சாவடியை, அந்த வாகனம் கடக்கும் போது, அங்குள்ள கையடக்க கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.அந்த வாகன உரிமையாளரின், வங்கி கணக்கில் இருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும். தமிழகத்தில் 80 சதவீத வாகனங்கள், 'பாஸ்டேக்' இல்லாமல், ரொக்க கட்டணம் செலுத்தி பயணிக்கின்றன.
![]()
|
இந்நிலையில், ஜன., 1 முதல், 'பாஸ்டேக்' முறையில் சுங்கக் கட்டணம் கட்டாயம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை இன்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ளார். முன்னதாக பாஸ்டேக் கட்டணம் முறை குறித்து தமிழகத்தில் உள்ள, 48 சுங்கச் சாவடிகளிலும் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE