ஸ்ரீநகர்:சென்னையில் படித்த போது ஆர்.எஸ். எஸ் கூட்டத்தில் பங்கேற்றதன் உத்வேகம் காரணமாக மாவட்ட வளர்ச்சிகவுன்சில் தேர்தலில் வெற்றிபெற முடிந்தது என பா.ஜ.,சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இளைஞர் உற்சாகத்துடன் தெரிவித்தார்.
![]()
|
காஷ்மீரில் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் பா.ஜ.,சார்பில் போட்டியிட்ட இளைஞர் சென்னையில் படித்துள்ளார்.மேலும் இவருடன் போட்டியிட்ட மற்ற இருவரின் வெற்றி பாஜ.விற்கு முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
காஷ்மீர் மாநிலம் இரண்டாக பிரிக்கப்பட்ட பின்னர் ஜம்மு உள்ளிட்ட பிற பகுதிகளில் 280 இடங்களுக்கான மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தல் நடைபெற்றது. இத் தேர்தலில் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா தலைமயிலான 7 அணிகள் கொண்ட குப்கர் கூட்டணி 110 இடங்கள் வரையில் வெற்றி பெற்றது. இரண்டாவது இடத்தில் தனிப்பெரும் கட்சியாக 75இடங்கள் வரையில் வென்றது. பிற கட்சிகள் மூன்றாம் இடத்தையும் ,காங்கிரஸ் நான்காம் இடத்தையும் பிடித்தது
பா.ஜ., தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்ற போதிலும் குறிப்பாக மூன்று பேரின் வெற்றி அக்கட்சிக்கு பெருமை தேடிதந்துள்ளது முக்கியமாக கருதப்படுகிறது. இக்கட்சியின் சார்பில் ஸ்ரீநகர் கென்மோ இடத்தில் போட்டியிட்ட அய்ஜாஸ்உசேன், பந்திபோரா மாவட்டம் துலைல் என்ற இடத்தில் போட்டியிட்ட அய்ஜாஸ் அஹமது மற்றும் புல்வாமா மாவட்டம் மின்ஹா லத்தீப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்
அய்ஜாஸ் உசேன்: இவர் காஷ்மீர் மாநில பா.ஜ.,வின் யுவ மோர்ச்சா பிரிவில் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் சென்னையில் அண்ணா பல்கலையில் பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் கல்லூரி நாட்களில் விடுதியில் தங்கி இருந்த போது எனது நண்பர்கள் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் பா.ஜ.,வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., கலாசாரத்தை எனக்கு காட்டினர்.
இதன்காரணமாக தேசியத்தின் மீதான பக்தியால் நான் பா.ஜ.,விற்கு ஈர்க்கப்பட்டேன்.எனது நண்பர்களை காஷ்மீரில் உள்ள எனது நகரங்களுக்கு அழைத்துச் சென்றேன். இருந்த போதிலும் நாங்கள் ஒருவருக்கொருவர் மதத்தில் ஒருபோதும் தலையிடவில்லை. முதலில் தனியார் நிறுவனத்தில் பணி புரிந்த போதிலும் அரசியல் தான் எனது முதல் காதல் . இதனால் அரசியலுக்கு வந்தேன் என்றார்.
![]()
|
அய்ஜாஸ் அஹமது கான்: இவர் பந்திபோராவின் முன்னாள் சுயேட்சை எம்.எல்.ஏவின் மகனாவார். இவர் வரலாற்று பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். எங்கள் பகுதியின் அழகான இடங்களை உலகளாவிய வரைபடத்தில் கொண்டு வர விரும்பினேன். தற்போது வெற்றிபெற்றிருப்பதன் மூலம் இதனை செய்ய முடியும் என நம்புவதாக தெரிவித்தார்.
மின்னா லத்தீப்:
மூன்றாவதாக புல்வாமா மாவட்டம் காக்புரா என்ற இடத்தில் வெற்றிபெற்றுள்ள பா.ஜ.,வின் 22 வயதே ஆன பெண் வேட்பாளர் மின்னா லத்தீப் கூறியதாவது: தனது தந்தை பா.ஜ.,வின் உறுப்பினராக இருந்து வருகிறார். தந்தையின் கரத்தை வலுப்படுத்துவதற்காக அரசியலில் களம் இறங்கி உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் சட்டப்படிப்பு படித்துள்ளார். இவர் கூறுகையில் கடந்த 2019ம் ஆண்டு புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்நிலை மாறி தற்போது புல்வாமா பகுதி சிறப்பாக உள்ளது என கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE