பொது செய்தி

இந்தியா

ஜன.,1 முதல் ‛பாஸ்டேக்' நடைமுறை கட்டாயம்

Updated : டிச 26, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி ''நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும், ஜன., 1 முதல், 'பாஸ்டேக்' கட்டண நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், சுங்கக் கட்டணம்
சுங்கச் சாவடி, பாஸ்டேக், கட்டாயம்,  ஜனவரி 1

புதுடில்லி ''நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும், ஜன., 1 முதல், 'பாஸ்டேக்' கட்டண நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தும் வாகனங்களிடம், கட்டணம் வசூலிப்பதற்காக, சுங்கச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதை கடந்து செல்லும் நான்கு சக்கர வாகனங்கள், சுங்கக் கட்டணம் செலுத்த, நீண்ட வரிசையில் காத்திருப்பதால், பயண நேரம், எரிபொருள் விரயமாகின்றன.
காத்திருப்பு


இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், மின்னணு முறையில் கட்டணம் வசூலிக்கும், பாஸ்டேக் நடைமுறையை, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிமுகப்படுத்தியது. பாஸ்டேக்மின்னணு அட்டைகளை, வங்கிகள், தொலை தொடர்பு நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இவற்றை வாங்கி, வாகனத்தின் முகப்பு கண்ணாடியில் ஒட்டினால் போதும்; சுங்கச் சாவடியை, அந்த வாகனம் கடக்கும் போது, அங்குள்ள கருவி வாயிலாக, சுங்கக் கட்டணம் தானாகவே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

அந்த வாகன உரிமையாளரின், வங்கி கணக்கில் இருந்து பணம் கழித்துக் கொள்ளப்படும். இதனால், வாகனங்களின் காத்திருப்பு முற்றிலுமாக குறைந்துள்ளன.சுங்கச் சாவடிகளில் உள்ள பல்வேறு வாயில்களில், தற்போது ஒரு வாயிலில் மட்டுமே, ரொக்கம் வசூலிக்கப்படுகிறது. மற்ற அனைத்து வாயில்களிலும், பாஸ்டேக் முறையில் கட்டணம் வசூலிக்கப்படுகின்றன.


அபராதம்


தமிழகத்தை பொறுத்தவரை, 80 சதவீத வாகனங்கள், பாஸ்டேக் இல்லாமல் ரொக்க கட்டணம் செலுத்தி பயணிக்கின்றன. இவ்வாறு, பாஸ்டேக் இல்லாமல், சுங்கச்சாவடிகளில் அதற்கான வழிகளை பயன்படுத்தும் வாகனங்களிடம், இரண்டு மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படுகின்றன.இந்நிலையில், வரும் ஜன., 1 முதல், பாஸ்டேக் முறையில் மட்டுமே, சுங்கக் கட்டணம் வசூலிக்க, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவெடுத்து உள்ளது.

இது குறித்து, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான நிதின் கட்கரி, நேற்று கூறியதாவது: தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் பயணியரின் நேரம் மற்றும் எரிபொருள் விரயத்தை தவிர்ப்பதற்காக, பாஸ்டேக் கட்டண முறை அமல்படுத்தப்பட்டது.


உத்தரவு


கடந்த, 2016ல், முதல்முறையாக, பாஸ்டேக் திட்டம் செயல்படுத்தப்பட்டது. அப்போது, நான்கு வங்கிகள் இணைந்து, ஒரு லட்சம் மின்னணு அட்டைகளை வழங்கின. இந்த எண்ணிக்கை, 2017ல் ஏழு லட்சமாகவும், 2018ம் ஆண்டில், 34 லட்சமாகவும் அதிகரித்தன. கடந்த, 2017, டிசம்பர் முதல், புதிய நான்கு சக்கர வாகனங்களின் பதிவுக்கு, பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டன.

அதேபோல, பாஸ்டேக் உள்ள வாகனங்களுக்கு மட்டுமே, எப்.சி., எனப்படும் தரச்சான்றிதழ் வழங்கப்படும் என்றும் உத்தரவிடப்பட்டது. அடுத்த ஆண்டு, ஏப்ரல், 1 முதல், வாகன காப்பீடு பெற, பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட உள்ளது. இப்படி படிப்படியாக, பாஸ்டேக் பயன்பாட்டை பரவலாக்க, மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.இந்நிலையில், நாட்டில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளிலும், அடுத்த மாதம், 1 முதல், பாஸ்டேக் கட்டண நடைமுறை கட்டாயமாக்கப்படுகிறது.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
26-டிச-202011:27:37 IST Report Abuse
Malick Raja சாலையில் துணிவிரித்து பிச்சை எடுப்பதும் இதுவும் ஒன்றுதான் .. ஒரு வாகனம் வாங்கும்போது . முதலில் விற்பனை வரி .. அப்புறம் GST அப்புறம் கேளிக்கைவரி . கமிஷன் .பதிவுக்கட்டணம் ,அதற்க்கு லஞ்சம் .. இப்படி சுமார் 7 லட்சத்திற்கு வாங்கும் கார் ரோட்டில் வரும்போது 9 லட்சம் அளவுக்கு வந்துவிடும் ..அதன் பிறகு இன்சூரன்ஸ் , ஆயா வரி ,அப்பன் வரி என்றெல்லாம் கொடுத்து ..பின்னர் வட்டிக்காரனுக்கு கொடுத்து கார் வாங்கியவன் நிலை ..சொல்லவே வேண்டாம் .. சரி காரை ஒட்டிக்கொண்டு போனால் குறுக்கே குடிகாரன் விழுந்தால் அவனுக்கு உதவித்தொகை .. வழியில் விபத்து இதெல்லாம் கடந்து வருபனிடம் சுங்கக்கட்டணம் என்ற அதிகார பிச்சை .. அரசுக்கு களங்கம் .. அரசுக்கு உணர்விருந்தால் சாலையில் சுங்க கட்டணம் இருக்கவே இருக்காது
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
25-டிச-202015:06:10 IST Report Abuse
sankaseshan நடப்பது செயல்படும் அரசு கட்கரி திறமையான அமைச்சர் கட்டணம் செலுத்தாமல் டிமிக்கி கொடுக்க முடியாது கொக்கிகுமார் எந்த விஷயத்தையும் கருதாளத்துடன் பதிவு செய்கிறார் .
Rate this:
Cancel
K.n. Dhasarathan - chennai,இந்தியா
25-டிச-202011:45:47 IST Report Abuse
K.n. Dhasarathan சுங்க சாவடிகள் என்கிற பெயரில் கொள்ளை நடக்கிறது, சமீபத்தில் திருவண்ணாமலை போயிருந்தேன், வழியல்பரனுர் மேட்ருச்சாவடியில் போர்டு 65 மற்றும் 85 ருபை போக வர என்று போட்டுவிட்டு ரூபா நுறு வாங்குகிறார்கள் அதுவும் போக மட்டும்தான், வரும்போது திரும்ப நுறு ரூபாய் வாங்குக்குங்கள் என்று சொல்கிறார்கள் திமிராக. பரனுர் தாண்டியதும் ரோடுகளும் சரோயில்லை, அதிலும் ஒரு பாலத்தின் மீது வேன் குதித்து குதித்து செல்கிறது, அந்த பாலம் சீக்கிரம் காலியாய்விடும் . இந்த கொள்ளைக்கு என்ன பெயர் ? இல்லை என்று சொல்லமுடியாது , என்னிடம் அந்த ரசீதுகள் இருக்கின்றன. இதற்கு பதில் நெடுஞ்சாலை ஆணையம் ஒரு உண்டியல் வைத்து " ரொம்ப கஸ்டப்படுறோம் எதாவது உதவி செயுங்கள் என்று கேட்கலாம், தவறு கிடையாது."
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X