பொது செய்தி

இந்தியா

ஒலிம்பிக் வீரர்களுக்கு தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை

Updated : டிச 24, 2020 | Added : டிச 24, 2020
Share
Advertisement
புதுடில்லி:'அடுத்த ஆண்டு, ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.ஒலிம்பிக் போட்டிகள், கிழக்காசிய நாடான ஜப்பானில், இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகள்

புதுடில்லி:'அடுத்த ஆண்டு, ஜப்பானில் நடக்கும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்' என, பார்லிமென்ட் நிலைக்குழு பரிந்துரைத்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிகள், கிழக்காசிய நாடான ஜப்பானில், இந்த ஆண்டு நடைபெறுவதாக இருந்தன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டன.


'வீடியோ கான்பரன்ஸ்'



இந்நிலையில், அடுத்த ஆண்டு, ஜூலையில், ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், ஒலிம்பிக் போட்டிகள் துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் குறித்து, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சகத்துக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, அறிக்கை தயார் செய்துள்ளது.ராஜ்யசபா தலைவர் வெங்கையா நாயுடுவிடம், நிலைக்குழுவின் தலைவர் வினய் பி.சஹஸ்ரபூதே, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயி லாக, இந்த அறிக்கையை சமர்ப்பித்தார்.

அதில் கூறப்பட்டுஉள்ளதாவது:கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மூடப்பட்ட விளையாட்டு பயிற்சி மையங்கள், மைதானங்கள் உடனடியாக திறக்கப்பட வேண்டும் அல்லது திறக்கப் பட்டு உள்ள பயிற்சி நிலையங்களில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.இந்திய விளையாட்டு ஆணையம் மற்றும் பயிற்சி மையங்களிலேயே, டாக்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டும். இதன் வாயிலாக, வீரர்கள் மருத்துவ சிகிச்சைகளுக்காக வெளியே செல்வது தவிர்க்கப்படும்.

கொரோனா பயண கட்டுப்பாடுகள் காரணமாக, பல்வேறு வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்கும் அனுபவத்தை, நம் வீரர்கள் இழந்துள்ளனர். இது, அவர்களின் பயிற்சியை பாதித்துள்ளது.


ராஜினாமா



எனவே, 2021 ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக, நம் வீரர்கள், அதிகபட்ச சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று பயிற்சி பெறுவதை, தேசிய விளையாட்டு சம்மேளனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

கொரோனா அச்சுறுத்தலால், நம் விளையாட்டு வீரர்களுக்கு பயிற்சி அளித்து வந்த வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பலர், பணியை ராஜினாமா செய்துவிட்டு, தங்கள் நாடுகளுக்கே சென்று விட்டனர்.தற்போது, 561 பயிற்சியாளர்களுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. இது, நம் வீரர்களின் ஒலிம்பிக் போட்டி திறனை பாதித்துவிடக் கூடாது. எனவே, காலியாக உள்ள பயிற்சியாளர் பணியிடங்கள், விரைவில் நிரப்பப்பட வேண்டும்.

ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ள விளையாட்டு வீரர்கள், பயிற்சியாளர்கள், உதவியாளர்களுக்கு, கொரோனா தடுப்பூசி வழங்குவதில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X