கோல்கட்டா:மேற்கு வங்க சட்டசபைக்கு, அடுத்த ஆண்டு நடக்கவுள்ள தேர்தலில், இடதுசாரிகளுடன், காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்துள்ளது.
எதிர்பார்ப்பு
மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபைக்கு, அடுத்த ஆண்டும் ஏப்ரல் -- மே மாதங்களில் தேர்தல் நடக்க உள்ளது.இதில், இடதுசாரிகள் -- காங்கிரஸ் இடையே, கூட்டணி அமையும் என, எதிர்பார்க்கப்பட்டது. மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில பொலிட் பீரோவின் இந்த முடிவுக்கு, மத்திய கமிட்டி, கடந்த அக்டோபரில் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், இடதுசாரிகளுடனான கூட்டணிக்கு, டில்லியில் உள்ள காங்., மேலிடம், அதிகாரபூர்வ ஒப்புதலை அளித்தது. இந்த தகவலை, மேற்கு வங்க காங்., தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, உறுதி செய்தார்.
வெற்றி
கடந்த, 2016 சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் உடனான கூட்டணியை, மார்க்சிஸ்ட் மத்திய கமிட்டி மறுத்தது. இதையடுத்து, இருகட்சிகளும் தனித் தனியே போட்டியிட்டன. இதில், காங்., 44 இடங்களிலும்; இடது முன்னணி, 32 இடங்களிலும் வெற்றி பெற்றன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE