சென்னை,: 'குப்பைக்கு வரி செய்யும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா?' என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
அவரது அறிக்கை: 'மின் வாரிய பணிகளைத் தனியாருக்கு ஒப்படைப்பதை எதிர்த்து போராடுவோம்' என்றேன்; வாபஸ் பெற்றார் அமைச்சர் தங்கமணி.'குப்பை கொட்டவும் வரி என்ற அறிவிப்பை ரத்து செய்யாவிட்டால் தி.மு.க. ஆட்சி வந்து செய்யும்' என்றேன்; வாபஸ் பெற்றார் அமைச்சர் வேலுமணி.
அறிவிப்பதற்கு முன் யோசிக்கவே மாட்டீர்களா? எண்ணித்துணிக கருமம் என அ.தி.மு.க. அமைச்சர்களை கேட்டுக் கொள்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
2 கோடி பேர் கவனிப்பு
கட்சித் தொண்டர்களுக்கு ஸ்டாலின் எழுதிய கடிதம்:தமிழகம் தழுவிய அளவில் டிச. 23ல் 1166 கிராம சபை கூட்டங்கள் நடந்துள்ளன. இதில் பங்கேற்றும் இணையம் வழியாகவும் அ.தி.மு.க. வை நிராகரிப்போம் என்ற தீர்மானத்தை 8 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஆதரித்துள்ளனர்.
முதல் நாளில் மட்டும் நேரடியாக 30 லட்சத்து 40 ஆயிரம் பேரும் இணையம் வழியாக 1.80 கோடி பேர் என 2.10 கோடிக்கும் மேலானோர் கிராம வார்டு சபைக் கூட்டங்களைக் கவனித்துள்ளனர்.
இன்று திண்டிவனம் தொகுதி மரக்காணம் பேரூராட்சியில் நடைபெறும் வார்டு சபைக் கூட்டத்தில் நான் பங்கேற்க இருக்கிறேன். கிராம சபைக் கூட்டங்களின் முதல் நாளில் பெற்ற வெற்றியின் துவக்கத்தை தமிழகத்தைப் பாழாக்கியிருக்கும் அ.தி.மு.க. ஆட்சியை வீழ்த்தும் வரை தொடர்ந்திடுவோம். முதல் நாள் வெற்றி முழுமையான வெற்றி.இவ்வாறு ஸ்டாலின் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE