ராணுவ பட்ஜெட்டுக்கு டிரம்ப் மறுப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
வாஷிங்டன்:பார்லி.,யில் நிறைவேறிய ராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்; இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். வரும், ஜன., 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து

வாஷிங்டன்:பார்லி.,யில் நிறைவேறிய ராணுவ பட்ஜெட்டுக்கு ஒப்புதல் அளிக்க, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மறுத்துள்ளார்; இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

அமெரிக்க அதிபர் பதவிக்கு சமீபத்தில் நடந்த தேர்தலில், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடன் வென்றார். வரும், ஜன., 20ல், அவர் பதவியேற்க உள்ளார். இந்தத் தேர்தல் முடிவுகளை ஏற்க, அதிபர் டொனால்டு டிரம்ப், தொடர்ந்து மறுத்து வருகிறார்.இந்நிலையில், 2021ம் ஆண்டுக்கான, 55 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள ராணுவ பட்ஜெட்டை உறுதி செய்யும் மசோதா, அமெரிக்க பார்லி.,யின் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் ஏகமனதாக நிறைவேறியது.

ஆனால், இதற்கு ஒப்புதல் அளிக்க, டிரம்ப் மறுத்துள்ளார். வழக்கத்துக்கு மாறான இந்த முடிவு எடுத்துள்ளது குறித்து அவர் கூறியுள்ளதாவது:இந்த மசோதாவின், 230வது பிரிவு, நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. சில ராணுவ மையங்களுக்கான பெயர்களை மாற்றுவது, அவசர காலத்தில், முடிவெடுக்க அதிபருக்கு அதிகாரம் இல்லாதது என, பல பிரிவுகள் ஏற்புடையதாக இல்லை.

அதேபோல், பல நாடுகளில் உள்ள நம் படைகளை திரும்ப அழைப்பதற்கு எதிராகவும், இது உள்ளது.தேவையில்லாத, நீண்ட போரில், நம் படைகள் ஈடுபடுவதை விரும்பவில்லை. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.ஆனால், இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

சபாநாயகர் நான்சி பலோசி கூறியுள்ளதாவது:நாட்டு மக்களின், நம் வீரர்களின் நலன் மீது, டிரம்புக்கு அக்கறை இல்லை. ராணுவ அதிகாரிகள், நிபுணர்கள், பார்லிமென்ட், எம்.பி.,க்கள் என, பல்வேறு தரப்பில் ஆலோசனை நடத்தப்பட்டே, இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனக்குள்ள, 'வீட்டோ' அதிகாரத்தை பயன்படுத்தி, ஒப்புதல் அளிக்க, டிரம்ப் மறுத்துள்ளார். அதை நிராகரிக்கும் வகையில், பார்லி.,யில், வரும், 28ல் மீண்டும் விவாதிக்கப்படும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X