அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஹிந்து தெய்வங்கள் பற்றி சர்ச்சை பேச்சு: கமலுக்கு கடும் எதிர்ப்பு

Updated : டிச 26, 2020 | Added : டிச 24, 2020 | கருத்துகள் (104)
Share
Advertisement
சென்னை: மாதர் சங்கமம் நிகழ்ச்சியில் பெண்கள் உடை அணிதல்; ஆடையின்றி ஹிந்து கடவுள் சிலைகள் இருப்பது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் நீதி மையத்தின் 'மாதர் சங்கமம்' நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: 'பாலியல் வன்கொடுமைக்கு காரணம் பெண்கள் துணி உடுத்தும் விதம் தான்; இதனால்
Kamal, Kamal Haasan, Hindu Gods, MNM, ஹிந்து தெய்வங்கள்,சர்ச்சை பேச்சு, கமல், எதிர்ப்பு

சென்னை: மாதர் சங்கமம் நிகழ்ச்சியில் பெண்கள் உடை அணிதல்; ஆடையின்றி ஹிந்து கடவுள் சிலைகள் இருப்பது குறித்து மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மையத்தின் 'மாதர் சங்கமம்' நிகழ்ச்சி நேற்று முன்தினம் சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது: 'பாலியல் வன்கொடுமைக்கு காரணம் பெண்கள் துணி உடுத்தும் விதம் தான்; இதனால் தான் ஆண்களின் மனம் கெட்டுப் போகிறது' என்கின்றனர். சாமி கூடத் தான் துணி குறைவாக உடுத்தியிருக்கிறது. சில சாமிகள் ஆடையே அணிவதில்லை.

அங்கே அவர்களுக்கு தோன்றாதது என் அக்காவையும் தங்கையையும் பார்க்கும் போது ஏன் தோன்றுகிறது? வேலை செய்யாமல் சம்பளம் என்பது போல் காதல் இல்லாமல் 'அது' வேண்டும் என நினைக்கின்றனர். காதல் இருந்தால் அதற்குஇருவருமே பொறுப்பு.

தமிழகத்தின் அரசியல் விதியை பெண்கள் மட்டும் நினைத்தால் மாற்றி விடலாம். இங்கு பெண் வாக்காளர்கள் ஆண்களை விட அதிகம். 234 தொகுதிகளில் 20 பேர் தான் பெண் எம்.எல்.ஏ.க்கள். இதை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.கமலின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமலுக்கு எதிரான கருத்துகள் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன.

Advertisement




வாசகர் கருத்து (104)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P. SRINIVASALU - chennai,இந்தியா
31-டிச-202012:20:42 IST Report Abuse
P. SRINIVASALU கமல் பேசுவதை பெரிதாக்க வேண்டாம். அவர் தகுதியற்றவர். அவர் ஒரு கோமாளி. எப்படியெல்லாம் வாழக்கூடாது என்பதுக்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு.
Rate this:
Cancel
Babu Desikan - Bangalore,இந்தியா
30-டிச-202019:27:36 IST Report Abuse
Babu Desikan இவர் ஒரு மிகப்பெரிய கோழை. அன்பே சிவத்தில் வில்லன் "தென்னாடுடைய சிவனே போற்றி" என்பார். கிருத்துவ மதக் கிழவி இவரைக் காப்பாற்றுவார். உன்னைப்போல் ஒருவனில் நான்கு தீவிரவாதிகளில் ஒருவனையாவது ஹிந்து வாகக் காண்பிக்க வேண்டிய கட்டாயம். நாஸ்திகவாதம் செய்ய மட்டும் ஹிந்துக் கடவுள்கள் வேண்டும். வசூல் ராஜாவில் ஜாகிர் சாகும் போது "ஆயிரம் சடங்கு இருக்கும் அவங்களுக்கு..பாடியை குடுத்து அனுப்புங்கோ" என்பார். நேர்மை பேசுவதாகக் கூறும் ஒரு முதுகெலும்பு இல்லாதவர்
Rate this:
Cancel
Indhuindian - Chennai,இந்தியா
30-டிச-202017:46:05 IST Report Abuse
Indhuindian சாத்தான் வேதம் வோதுதும்பாங்களே அது இதுதான். கண்டதே கட்சி கொண்டதே கோலாம்ன்னு ஒரு ஐம்பது வருஷம் அலைஞ்சிட்டு மிகவும் மோசமான படங்களில் நடித்துவிட்டு இப்போ இந்த மாதிரி பிரசங்கம் வெட்கக்கேடு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X