புதுடில்லி :டில்லி எல்லையில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க, பஞ்சாபில் இருந்து, 'ஜீப்' ஓட்டி வந்த, 62 வயதான பாட்டியின் புகைப்படம், சமூக வலை தளங்களில் வேகமாக பரவுகிறது. மத்திய அரசின், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக, விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட பல மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், தலைநகர் டில்லியை நோக்கி வந்தபடி உள்ளனர்.எனினும், டில்லிக்குள் அனுமதிக்கப்படாததால், எல்லைப் பகுதியில் அமர்ந்தபடி, அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இந்நிலையில், பஞ்சாபைச் சேர்ந்த, 62 வயதான, மன்ஜீத் கவுர் என்ற, விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பாட்டி, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துஉள்ளார்.
டில்லியில் போராடும், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்க விரும்பிய அவர், அங்கு சென்று போராட்டத்தில் பங்கேற்க முடிவு செய்தார். யாருடைய உதவியையும் கோராமல், பஞ்சாபில் இருந்து, டில்லி எல்லைப் பகுதிக்கு, தானே, ஜீப்பை ஓட்டி வந்தார். அவருடன், மேலும், ஐந்து பெண்கள் உடன் வந்தனர்.அந்த பாட்டி, ஜீப்பில் வரும் புகைப்படத்தை, விவசாய சங்கம், தன், 'டுவிட்டர்' பக்கத்தில் வெளியிட்டது. அந்த புகைப்படம், சமூக வலை தளங்களில் வேகமாக
பரவியது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE