சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பாண்டியனின் வங்கி லாக்கரில் இருந்த ரூ.50 லட்சம் பறிமுதல்

Added : டிச 24, 2020
Share
Advertisement
சென்னை:லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ள, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் பதுக்கி இருந்த, 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் துறை இயக்ககத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன், 58.சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார், பாண்டியனின் அலுவலகம்

சென்னை:லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியுள்ள, சுற்றுச்சூழல் துறை கண்காணிப்பாளர் பாண்டியனின் வங்கி லாக்கரில் பதுக்கி இருந்த, 50 லட்சம் ரூபாயை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சென்னை, சைதாப்பேட்டை பனகல் மாளிகையில் செயல்பட்டு வரும், சுற்றுச்சூழல் துறை இயக்ககத்தில், கண்காணிப்பாளராக பணியாற்றியவர் பாண்டியன், 58.சில தினங்களுக்கு முன், லஞ்ச ஒழிப்பு போலீசார், பாண்டியனின் அலுவலகம் மற்றும் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில், விடிய விடிய சோதனை நடத்தினர்.அங்கிருந்து, 1.37 கோடி ரூபாய் ரொக்கம் உட்பட, 11 கோடி ரூபாய்க்கும் அதிகமான தங்கம், வைர நகைகள், கட்டு கட்டாக பணம், பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இதையடுத்து, லஞ்ச முதலையாக செயல்பட்டு வந்த பாண்டியன், 'சஸ்பெண்ட்' செய்யப் பட்டார். இவர் வங்கி லாக்கரில் பதுக்கி இருந்த, லஞ்ச பணம், 50 லட்சத்து, 500 ரூபாயை போலீசார் கைப்பற்றினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X