சென்னை:'போலீசார் மீது பெறப்படும் புகாரை விசாரித்து, உடனடியாக நடவடிக்கை எடுக்க, ஆணையம் அமைப்பது அவசியமாகிறது' என, சமூக சமத்துவ படை கட்சி தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான சிவகாமி, தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவரது அறிக்கை:நாடு முழுதும், போலீஸ் நிலையங்களிலேயே, பாலியல் பலாத்காரம், வன்முறை, கொலை போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. குறிப்பாக, ஏழை மக்கள் மீதும், அடித்தட்டு சமூகத்தின் மீதும், காவல் துறை கனிவான பார்வை கொண்டிருக்கவில்லை.மகளிர் போலீஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டும், அவை வீட்டிற்கு மிக அருகில் இருந்தாலும் கூட, பொது மக்களும், பெண்களும் புகார் அளிக்க, அஞ்சும் நிலை உள்ளது.
புகார் அளித்தாலும், உடனடி விசாரணை செய்து, வழக்கை பதிவு செய்யாமல் தாமதம் செய்வது, புகார் அளிக்க வருபவரை சந்தேகப்படுவதாக உள்ளது.இதற்காகவே, போலீசார் மீது பெறப்படும் புகாரை விசாரித்து, உடனே நடவடிக்கை எடுக்க ஆணையம் அமைப்பது அவசியம். இதுவரை, தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பது, தாமதப்படுத்துவது அதிர்ச்சி அளிக்கிறது.
காவல் துறை உண்மையிலேயே மக்கள் நண்பன் என்பதை நிரூபிக்க முயற்சி எடுப்பதோடு, அவர்கள், அத்துமீறி அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் இருக்க, ஆணையத்தை உடனே அமைத்து, அவர்கள் மீது தரப்படும் புகாரை விசாரித்து, ஆண்டுதோறும், விரிவான அறிக்கையை, மக்கள் பார்வைக்கு வெளியிட வேண்டும்.இவ்வாறு, அறிக்கையில் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE