அரசியல் செய்தி

தமிழ்நாடு

சாமி பற்றி சர்ச்சை பேச்சு கமலுக்கு கடும் எதிர்ப்பு

Added : டிச 24, 2020
Share
Advertisement
சென்னை:மாதர் சங்கமம் நிகழ்ச்சியில், பெண்கள் உடை அணிதல்; ஆடையின்றி சாமி சிலைகள் இருப்பது குறித்து, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.மக்கள் நீதி மையத்தின், 'மாதர் சங்கமம்' நிகழ்ச்சி நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது:'பாலியல் வன்கொடுமைக்கு காரணம், பெண்கள் துணி உடுத்தும் விதம் தான்; இதனால் தான்,

சென்னை:மாதர் சங்கமம் நிகழ்ச்சியில், பெண்கள் உடை அணிதல்; ஆடையின்றி சாமி சிலைகள் இருப்பது குறித்து, மக்கள் நீதி மையம் தலைவர் கமல் பேசியது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் நீதி மையத்தின், 'மாதர் சங்கமம்' நிகழ்ச்சி நேற்று முன்தினம், சென்னையில் நடந்தது. அக்கூட்டத்தில் கமல் பேசியதாவது:'பாலியல் வன்கொடுமைக்கு காரணம், பெண்கள் துணி உடுத்தும் விதம் தான்; இதனால் தான், ஆண்களின் மனம் கெட்டுப் போகிறது' என்கின்றனர். சாமி கூடத் தான் துணி குறைவாக உடுத்தியிருக்கிறது.சில சாமிகள் ஆடையே அணிவதில்லை. அங்கே அவர்களுக்கு தோன்றாதது, என் அக்காவையும், தங்கையையும் பார்க்கும் போது, ஏன் தோன்றுகிறது?

வேலை செய்யாமல் சம்பளம் என்பது போல், காதல் இல்லாமல், 'அது' வேண்டும் என, நினைக்கின்றனர். காதல் இருந்தால், அதற்கு இருவருமே பொறுப்பு.தமிழகத்தின் அரசியல் விதியை பெண்கள் மட்டும் நினைத்தால் மாற்றி விடலாம். இங்கு பெண் வாக்காளர்கள், ஆண்களை விட அதிகம்.

234 தொகுதிகளில், 20 பேர் தான் பெண் எம்.எல்.ஏ.,க்கள். இதை மாற்ற வேண்டும்.இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.கமலின் இந்த பேச்சு, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. கமலுக்கு எதிரான கருத்துகள், சமூக வலைதளங்களில், பரப்பப் பட்டு வருகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X