பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாட்டம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
சென்னை:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழகம் முழுதும், 29ம் தேதி வரை, தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில், பேச, எழுத, அரசு அறிக்கை, உத்தரவுகள் உள்ளிட்டவற்றில், தமிழை முழுமையாக பயன்படுத்தும் வகையில், 1956, டிச., 27ல், தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்டது.அதை நினைவுகூரும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார கொண்டாட்டம்,

சென்னை:தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழகம் முழுதும், 29ம் தேதி வரை, தமிழ் ஆட்சி மொழி சட்ட வாரம் கொண்டாடப்படுகிறது.தமிழகத்தில், பேச, எழுத, அரசு அறிக்கை, உத்தரவுகள் உள்ளிட்டவற்றில், தமிழை முழுமையாக பயன்படுத்தும் வகையில், 1956, டிச., 27ல், தமிழ் ஆட்சி மொழி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அதை நினைவுகூரும் வகையில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், தமிழ் ஆட்சி மொழி சட்ட வார கொண்டாட்டம், அனைத்து மாவட்டங்களிலும், நேற்று முன்தினம் துவங்கியது.இதில், தமிழறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், தமிழ் அமைப்புகள் மற்றும் இளந்தமிழர் இலக்கியப் பயிற்சிப் பட்டறை மாணவர்களுடன் இணைந்து, ஆட்சிமொழி சட்டம் குறித்த உரைகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள், கடைகள், உணவகங்கள் ஆகியவற்றில், தமிழ் ஆட்சி மொழிச் சட்டத்தை நினைவுகூரும் வகையில், ஸ்டிக்கர்களை ஒட்டுதல், துண்டறிக்கை மற்றும் அரசாணை வழங்குதல் உள்ளிட்ட செயல்களிலும் ஈடுபடுகின்றனர். இந்தப் பணி, வரும், 29ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X