சென்னை:ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி பானுமதி வீட்டின் முன், நள்ளிரவில் ரகளை செய்த வழக்கில், முன்னாள் நீதிபதி கர்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை, திருவான்மியூர் கலாஷேத்ரா காலனியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதியின் வீடு உள்ளது. இந்த வீட்டில், அவரது மகள் வசிக்கிறார்.அக்டோபரில், இந்த அடுக்குமாடி குடியிருப்பில், சென்னை மற்றும் கோல்கட்டா உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கர்ணன், 62, மற்றும் அவரது ஆதரவாளர்கள், நள்ளிரவில் ரகளையில் ஈடுபட்டனர். இதுகுறித்து, திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர்.
![]()
|
பின், இந்த வழக்கு, மத்திய குற்றப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
இவ்வழக்கில், முன்னாள் நீதிபதி கர்ணன், 62 மற்றும் அவரது ஆதரவாளர்களான, பெருங்களத்துாரைச் சேர்ந்த மாணிக்கவாசகம், 66, பிரகாஷ், 40, விஜயராகவன், 49, ஏகாம்பரம், 60 மற்றும் சூளைமேட்டைச் சேர்ந்த குப்பன், 60 ஆகியோரை, மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ஏற்கனவே, நீதிபதிகள் குறித்து அவதுாறாக, சமூக வலைதளத்தில், வீடியோ வெளியிட்டது தொடர்பாக, முன்னாள் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE