விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் இன்று பேச்சு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விவசாயிகளுடன் மத்திய அமைச்சர் இன்று பேச்சு

Added : டிச 24, 2020
Share
சென்னை:மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வேளாண் சட்டங்கள் குறித்து, செங்கல்பட்டு விவசாயிகளுடன், கலந்துரையாடுகிறார்.மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக, பிரகாஷ் ஜாவடேகர் உள்ளார். இவர், வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகளுடன் கலந்துரையாட, டில்லியில் இருந்து, சென்னை வந்தார்.இன்று காலை, 9:00 மணிக்கு,

சென்னை:மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர், வேளாண் சட்டங்கள் குறித்து, செங்கல்பட்டு விவசாயிகளுடன், கலந்துரையாடுகிறார்.

மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக, பிரகாஷ் ஜாவடேகர் உள்ளார். இவர், வேளாண் சட்டங்கள் குறித்து, விவசாயிகளுடன் கலந்துரையாட, டில்லியில் இருந்து, சென்னை வந்தார்.இன்று காலை, 9:00 மணிக்கு, சென்னையில் இருந்து, செங்கல்பட்டு செல்கிறார்.

அங்கு நடைபெறும் விவசாயிகள் கூட்டத்தில், புதிய வேளாண் சட்டங்களின் சிறப்பு அம்சங்கள், அதன் நன்மைகள் குறித்து விவரிக்கிறார்.அதில், விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளிக்கிறார். பின், செய்தியாளர்களை சந்திக்கிறார். மீண்டும் சென்னை திரும்பும் ஜாவடேகர், மாலை டில்லி புறப்படுகிறார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X