மனைப்பிரிவு அனுமதிக்கு ஆன்லைன் விண்ணப்பம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மனைப்பிரிவு அனுமதிக்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

Added : டிச 24, 2020
Share
சென்னை:புதிய மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று ஆகியவற்றுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும் வசதியை, சி.எம்.டி.ஏ., அறிமுகம் செய்துள்ளது.சென்னை பெருநகர் பகுதியில், கட்டட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று வழங்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொள்கிறது. இதில், விரைவு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன்படி,

சென்னை:புதிய மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று ஆகியவற்றுக்கு, 'ஆன்லைன்' முறையில் விண்ணப்பிக்கும் வசதியை, சி.எம்.டி.ஏ., அறிமுகம் செய்துள்ளது.

சென்னை பெருநகர் பகுதியில், கட்டட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல், பணி நிறைவு சான்று வழங்கும் பணிகளை, சி.எம்.டி.ஏ., மேற்கொள்கிறது. இதில், விரைவு மற்றும் வெளிப்படை தன்மையை உறுதி செய்ய ஆன்லைன் முறை அறிமுகம் செய்யப்பட உள்ளது.இதன்படி, 2017ல் தனியாக ஒரு இணையதளம் ஏற்படுத்தப்பட்டு, கட்டட அனுமதி விண்ணப்பங்கள் ஆன்லைன் முறையில் பதிவு செய்யப்பட்டன. இப்பணிகள், பெயரளவுக்கு மட்டுமே அமலில் இருந்தன.

இந்நிலையில், 2019ல் பொது கட்டட விதிகள் அமலுக்கு வந்த நிலையில், கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களை, ஆன்லைன் முறையில் பெறுவது கட்டாயமாக்கப்பட்டது.இதன் அடுத்த கட்டமாக, மனைப்பிரிவு அனுமதி, பணி நிறைவு சான்று, நில வகைப்பாடு மாற்றம் ஆகியவற்றுக்கு, ஆன்லைன் வசதி வேண்டும் என, கட்டுமான துறையினர் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை செயல்படுத்தும் முடிவை, சி.எம்.டி.ஏ., எடுத்து உள்ளது. இதன்படி, மனைப் பிரிவு அனுமதி, பணி நிறைவு சான்று, நில வகைப்பாடு மாற்றம் ஆகியவற்றுக்கான விண்ணப்பங்களை, ஆன்லைன் முறையில் பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.இதற்காக உருவாக்கப்பட்டுள்ள, சி.எம்.டி.ஏ.,வின், https://onlineppacmda.tn.gov.in/ என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவு செய்யலாம். அனைத்து வகை விண்ணப்பங்களுக்கும், விரைவில், ஆன்லைன் முறை பதிவு கட்டாயமாக்கப்பட உள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X