ஊட்டி:'மீண்டும் ஒரு தொற்று நம்மை முடக்கி விடாமல் இருக்க, நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,' என, சுகாதார துறை அறிவுறுத்தி வருகிறது.நீலகிரியில், கொரோனா தொற்று காரணமாக, கடந்த, 8 மாதங்களுக்கு பின், ஊரடங்கு தளர்த்தப்பட்டு பொதுமக்களும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.இதுவரை, 2.40 லட்சம் மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தினமும், 2,000 மாதிரி பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.நீலகிரி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் பாலுசாமி கூறுகையில்,''பிரிட்டனில் உருவெடுத்துள்ள, புதிய ரக கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க, தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அறிகுறிகள் இல்லாவிட்டாலும், பரிசோதனைக்கு உட்படுத்தி, 14 நாட்கள் தனிமைப்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.சமீபத்தில், ஐரோப்பிய நாடுகளிலிருந்து வந்தவர்கள் யாராவது இருந்தால், 1077 என்ற மாவட்ட கட்டுப்பாட்டு எண்ணில், பொது மக்கள் தகவல் தெரிவிக்கலாம். மீண்டும் ஒரு தொற்று நம்மை முடக்கி விடாமல் இருக்க, நாம் ஒவ்வொருவரும் பாதுகாப்பு வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE