சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.26 கோடி வரி மோசடி சென்னையில் ஒருவர் கைது

Added : டிச 24, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:போலி, 'பில்' தயாரித்து, 26 கோடி ரூபாய் வரி மோசடி செய்த ஒருவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், ஒரு இரும்பு கழிவு நிறுவனம், போலியான பில்கள் வாயிலாக, உள்ளீட்டு வரி சலுகை பெற்றதாக, ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து

சென்னை:போலி, 'பில்' தயாரித்து, 26 கோடி ரூபாய் வரி மோசடி செய்த ஒருவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், ஒரு இரும்பு கழிவு நிறுவனம், போலியான பில்கள் வாயிலாக, உள்ளீட்டு வரி சலுகை பெற்றதாக, ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து நடத்திய புலனாய்வில், வரி சலுகை பெறுவதற்காக, இரும்பு கழிவு நிறுவன இயக்குனர், பொருட்களை வினியோகம் செய்யாமல், 150 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து, 26 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகை பெற்றுள்ளார்.இது தொடர்பாக, அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது, சென்னை வடக்கு மண்டலம், ஜி.எஸ்.டி., மோசடி தொடர்பாக, மேற்கொள்ளும் ஐந்தாவது நடவடிக்கை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
25-டிச-202010:37:58 IST Report Abuse
R.RAMACHANDRAN ஜி.எஸ்.டி. வரி விதிப்பு முறையால் போலியான வர்த்தகர்கள் பயனடைகிறார்கள்.அந்த சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைக்க மத்திய அரசு நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.மாறாக இந்த நாட்டில் குழப்பங்கள் உருவாக்க ஏதாவது செய்து கொண்டிருக்கிறார்கள் மத்தியில் ஆள்பவர்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X