சென்னை:போலி, 'பில்' தயாரித்து, 26 கோடி ரூபாய் வரி மோசடி செய்த ஒருவரை, சென்னை ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை வடக்கு மண்டல ஜி.எஸ்.டி., கமிஷனர் ரவீந்திரநாத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: சென்னையில், ஒரு இரும்பு கழிவு நிறுவனம், போலியான பில்கள் வாயிலாக, உள்ளீட்டு வரி சலுகை பெற்றதாக, ஜி.எஸ்.டி., வடக்கு மண்டல அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து நடத்திய புலனாய்வில், வரி சலுகை பெறுவதற்காக, இரும்பு கழிவு நிறுவன இயக்குனர், பொருட்களை வினியோகம் செய்யாமல், 150 கோடி ரூபாய்க்கு போலி பில் தயாரித்து, 26 கோடி ரூபாய் உள்ளீட்டு வரி சலுகை பெற்றுள்ளார்.இது தொடர்பாக, அந்த நபர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இது, சென்னை வடக்கு மண்டலம், ஜி.எஸ்.டி., மோசடி தொடர்பாக, மேற்கொள்ளும் ஐந்தாவது நடவடிக்கை.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE