பொது செய்தி

தமிழ்நாடு

ஆற்றில் நுரை கலந்த நீர் வனவிலங்குகள், மக்களுக்கு நோய் அபாயம்

Added : டிச 24, 2020
Share
Advertisement
குன்னுார்:குன்னுாரில் இருந்து பவானி ஆற்றில் கலக்கும் ஆற்று நீரில் நுரை கலந்து வருவதால், வனவிலங்குகள் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுார் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் உருவாகும் நீர், பஸ்ஸ்டாண்ட், காட்டேரி, மரப்பாலம், ரன்னிமேடு வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சங்கமிக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, நுரை அதிகளவில் ஏற்பட்டு ஆற்றில்
 ஆற்றில் நுரை கலந்த நீர் வனவிலங்குகள், மக்களுக்கு நோய் அபாயம்

குன்னுார்:குன்னுாரில் இருந்து பவானி ஆற்றில் கலக்கும் ஆற்று நீரில் நுரை கலந்து வருவதால், வனவிலங்குகள் மற்றும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.குன்னுார் சுற்றுப்புற மலைப்பகுதிகளில் உருவாகும் நீர், பஸ்ஸ்டாண்ட், காட்டேரி, மரப்பாலம், ரன்னிமேடு வழியாக மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் சங்கமிக்கிறது. இந்நிலையில், நேற்று காலை, நுரை அதிகளவில் ஏற்பட்டு ஆற்றில் மாசு கலந்து காணப்பட்டது.அப்பகுதி மக்கள் நகராட்சிக்கு அளித்த புகாரின் பேரில், நகராட்சி சுகாதார ஆய்வாளர் செல்வராஜ் உட்பட ஊழியர்கள் ஆய்வுக்காக தண்ணீர் மாதிரியை சேகரித்து, கோவை வேளாண் பல்கலை கழகத்துக்கு அனுப்பி உள்ளனர்.மக்கள் கூறுகையில், 'இந்த ஆற்றுநீரில், ஆசிட் போன்று அவ்வப்போது நுரை கலந்த நீர் வருகிறது. இந்த நீரையே, பலரும் பயன்படுத்துவதால், நோய் ஏற்படும் அபாயம் உள்ளது,' என்றனர். இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X