எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: பல பகுதிகளில் அனுஷ்டிப்பு | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

எம்.ஜி.ஆர்., நினைவு தினம்: பல பகுதிகளில் அனுஷ்டிப்பு

Added : டிச 24, 2020
Share
ஊட்டி:நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், எம்.ஜி. ஆர்., நினைவு தினம், அ.தி.மு.க., சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.ஊட்டி, காபிஹவுஸ் பகுதியில், வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., திருவுருவப்படத்திற்கு, மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.l கோத்தகிரி டானிங்டன் பகுதியில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., சாந்தி

ஊட்டி:நீலகிரியின் பல்வேறு பகுதிகளிலும், எம்.ஜி. ஆர்., நினைவு தினம், அ.தி.மு.க., சார்பில் அனுஷ்டிக்கப்பட்டது.ஊட்டி, காபிஹவுஸ் பகுதியில், வைக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., திருவுருவப்படத்திற்கு, மாவட்ட செயலாளர் வினோத் தலைமையில், கட்சியினர் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.l கோத்தகிரி டானிங்டன் பகுதியில், எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து, சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. எம்.எல்.ஏ., சாந்தி ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.l குன்னுார் அண்ணாதுரை சிலை அருகே அ.தி.மு.க., நகர செயலாளர் சரவண குமார் தலைமையில், கட்சியினர் மலர் அஞ்சலி செலுத்தினர்.l அருவங்காடு பகுதியில், குன்னுார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராஜூ தலைமையில், கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மஞ்சூரில் குந்தா ஒன்றிய செயலாளர் வசந்த ராஜன் தலைமையில், அஞ்சலி செலுத்தப்பட்டது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X