பரமக்குடி : பரமக்குடி ரயில்வே ஸ்டேஷன் - ஆர்ச் சந்திக்கும் நெடுஞ்சாலையில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்டுள்ள நிலையில், பஸ் ஸ்டாப்களால் நெரிசல் தொடர்கிறது.
பரமக்குடி ஐந்து முனை ரோடு துவங்கி சவுராஷ்ட்ர மேல்நிலைப் பள்ளி வரை இரு ஓரங்களிலும் பள்ளி, வங்கி, மருத்துவமனை, வழிபாட்டு தலங்கள்,பஸ் ஸ்டாண்ட், சந்தை, வணிக நிறுவனங்கள் இயங்கி வருகிறது. மேலும் ஆர்ச் மற்றும்ரயில்வே ஸ்டேஷன் நான்கு முனை சந்திப்பாக திகழ்கிறது. இந்நிலையில்ரோட்டின் இரு ஓரங்களிலும் டூவிலர், சரக்கு வாகனங்களை நிறுத்தி வைக்கின்றனர். இதனால் நாள் முழுவதும் நெரிசல் உண்டாகிறது.
இதற்காக ரோட்டின் நடுவே சென்டர் மீடியன் அமைத்து, நெரிசலை குறைப்பதுடன், விபத்தில்லா போக்குவரத்திற்கு வழிவகுக்க வேண்டும் என தினமலர் நாளிதழ் சுட்டிக்காட்டி வந்தது. தற்போது ஆர்ச் சந்திப்பில் சென்டர் மீடியன் அமைக்கப்பட்ட நிலையில், இரண்டு ஓரங்களிலும் பஸ்களையும் நிறுத்துவதால் நெரிசல் மேலும் அதிகரிக்கிறது. ஆகவே இப்பகுதியில் போக்குவரத்து போலீசார் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு, பஸ் ஸ்டாப்களை முறைப்படுத்துவதுடன், நெரிசலை குறைக்க தொடர்ந்து ரோட்டில் சென்டர் மீடியன்களை விரிவுபடுத்த வேண்டும்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE