மோகினி அவதாரத்தில் பெருமாள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மோகினி அவதாரத்தில் பெருமாள்

Added : டிச 24, 2020
Share
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.இக்கோயிலில் பகல்பத்து உற்சவம் டிச., 15 அன்று துவங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு ஏகாதசி மண்டபம் எழுந்தருளிய பெருமாள் முன், அர்ச்சகர்கள் பன்னிரண்டு ஆழ்வார்களின் பாசுரங்களை தினமும் வாசித்தனர்.தொடர்ந்து பத்தாம்

பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பகல் பத்து உற்சவத்தின் பத்தாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு பெருமாள் மோகினி அவதாரத்தில் அருள்பாலித்தார்.

இக்கோயிலில் பகல்பத்து உற்சவம் டிச., 15 அன்று துவங்கியது. தினமும் காலை 9:00 மணிக்கு ஏகாதசி மண்டபம் எழுந்தருளிய பெருமாள் முன், அர்ச்சகர்கள் பன்னிரண்டு ஆழ்வார்களின் பாசுரங்களை தினமும் வாசித்தனர்.தொடர்ந்து பத்தாம் நாளான நேற்று மாலை 5:00 மணிக்கு மோகினி அவதாரத்தில் வீதி வலம் வந்த பெருமாள், 6:00 மணிக்கு கோயிலை அடைந்தார். பின்னர் தீபாராதனை காண்பிக்கப்பட்டு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை 5:00 மணிக்கு பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பரமபதவாசல் வழியாக வரவுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X