உடுமலை:கணியூர் ஐயப்பன் கோவிலில், மண்டல பூஜை மற்றும் சங்காபிேஷக பூஜை நடக்கிறது.கணியூர் ஐயப்பன் கோவிலில், 8ம் ஆண்டு துவக்க விழா, மண்டல பூஜை மற்றும் 108 சங்காபிேஷக பூஜை, வரும், நாளை (26ம் தேதி) துவங்குகிறது.அன்று காலை, 8:30 மணிக்கு, ஜண்டை மேளத்துடன், குதிரை வாகனத்தில், ஐயப்பன் அமராவதி ஆற்றுக்குச்செல்லுதல் மற்றும் ஆறாட்டு உற்சவம் நடக்கிறது. மாலை, 5:00 மணிக்கு, ஆற்றங்கரையில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகம், ஊர்வலம் நடக்கிறது.வரும் 27ம் தேதி, காலை, 8:30க்கு, 24 வகையான மூலிகை அபிேஷகம், 9 நதிகளில் இருந்து எடுத்து வந்த தீர்த்த அபிேஷகம் நடக்கிறது. காலை, 11:30க்கு, சிறப்பு அலங்காரம், தீபாராதனை மற்றும் அன்னதானம் நடக்கிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE