வால்பாறை;வங்கிகளில் புதிய கணக்கு துவங்க, பள்ளி மாணவர்கள் 'பான் கார்டு' சமர்பிக்க தேவையில்லை என, வங்கி அதிகாரிகள் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.வால்பாறையில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அதிகாரிகள் ஆலோசனை கூட்டம், தாலுகா அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு, வால்பாறை தாசில்தார் ராஜா தலைமை வகித்தார்.கூட்டத்தில் மக்கள் பேசும்போது, 'ஏ.டி.எம்., களில் தொழிலாளர்கள் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்க சிரமப்படுகின்றனர். எனவே, கூடுதல் ஏ.டி.எம்., மையம் திறப்பதோடு, எஸ்டேட் பகுதிகளுக்கு நடமாடும் ஏ.டி.எம்., சேவை கொண்டு வர வேண்டும்.புதிய கணக்கு துவங்க, பள்ளி குழந்தைகளுக்கு பான்கார்டு கேட்பதால், அரசின் உதவித்தொகை பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி குழந்கைகளுக்கு பான்கார்டு கேட்பதை வங்கி அதிகாரிகள் தவிர்க்க வேண்டும்,' என்றனர்.மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மோகன் பேசும்போது, ''வால்பாறையில், தோட்ட தொழிலாளர்களின் வசதிக்காக, கூடுதல் ஏ.டி.எம்., மையம் அமைக்கப்படும். வங்கி ஏ.டி.எம்.,களில் போதுமான அளவு பணம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி குழந்தைகளுக்கு வங்கி கணக்கு துவங்க, இனி, 'பான் கார்டு' சமர்பிக்க தேவையில்லை,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE