ராமநாதபுரம் : ராமநாதபுரம் அருகே நைனாமரைக்கான் கிராமத்தை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி 74. இவரது உறவினர் ராஜாமணி மனைவி சிவகல்பனா மதுரையில் உள்ளார். அவரதுதோப்பு நைனாமரைக்கான் பகுதியில் உள்ளது.சுந்தரமூர்த்திக்கும் சிவகல்பனாவுக்கும் சொத்துப் பிரச்னை உள்ளது.2016ல் சுந்தரமூர்த்தி, சிவகல்பனா தோப்புக்குள் புகுந்து மின்மோட்டாரை சேதப்படுத்தினார். திருப்புல்லாணி போலீசார் வழக்குப் பதிந்தனர்.ராமநாதபுரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடந்தது. இதில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. சுந்தரமூர்த்தியைநீதிமன்றம் கலையும் வரை நீதிமன்ற காவலில் வைத்து,ரூ.500 அபராதம் விதித்து தலைமை நீதிபதி சண்முகசுந்தரம் உத்தரவிட்டார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE