ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் 5651 பேருக்கு கற்போம், எழுதுவோம் பயிற்சி அளிக்கப்படுகிறது.
பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கம் சார்பில், மாவட்டத்தில் 15முதல் 70 வயது வரை படிப்பறிவு இல்லாத 5651 பேர் கண்டறியப்பட்டனர். அவர்களுக்கு 461மையங்களில் நவ.,30 முதல் கற்போம், எழுதுவோம் பயிற்சி, தன்னார்வலர் குழு மூலம் பயிற்சி அளிக்கப்படுகிறது.பிப்ரவரியில் பயிற்சி முடிக்கப்பட்டு சிறப்பு தேர்வு நடத்தப்பட உள்ளன. இதில் வென்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்படுகிறது.சிறப்பு தேர்வில் அதிக நபர்களை தேர்ச்சிபெற வைக்கும் பயற்சியாளர்களுக்கு மாவட்ட, மாநில அளவில் பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE